ads

படை வீரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

padaveeran release from february 2nd

padaveeran release from february 2nd

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பினை பெற்ற 'மாரி' படத்தில் வில்லன் கெட்டப்பில் காவல் துறை அதிகாரியாக விஜய் யேசுதாஸ் நடித்து திரையுலகில் அறிமுகமானார். இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து விஜய் யேசுதாஸ் 'படை வீரன்' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தினை முதுமுக இயக்குனர் தனா எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகிவருகிறது. இவர் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான மணிரத்னமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தற்பொழுது 'படை வீரன்' படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்திருப்பது குறிப்பிட தக்கது.     

எவோக் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மதிவாணன் தயாரித்து வரும் இப்படத்தில் நடிகர் தனுஷ் 'லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா..ஊத்தி குடிச்சா எல்லாம் ஒன்னுடா...'  என தொடங்கும் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலின் மேக்கிங் வீடியோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. விஜய் யேசுதாஸிடம் இணைந்து பாரதிராஜா, அகில், அம்ரிதா போன்றவர்கள் முக்கிய வேடத்தில் இணைந்துள்ள இப்படத்தில் இராசவேல் மோகன் ஒளிப்பதிவு பணியையும், கார்த்திக் ராஜா இசையமைக்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். இவர் மாணிக்கம், உல்லாசம், அலெக்சாண்டர், நாம் இருவர் நமக்கு இருவர், உள்ளம் கொள்ளை போகுதே, டும் டும் டும், ஆல்பம், ரகசியமாய், குடைக்குள் மழை, நெறஞ்ச மனசு, நாளை, மனதோடு, மழைக்காலம், சகாப்தம் போன்ற படங்களுக்கு இசையமைத்து இருப்பது குறிப்பிட தக்கது. படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வந்த படக்குழு அதிகார பூர்வமாக படத்தினை வருகிற பிப்ரவரி மாதம் 2ம் தேதியில் வெளியிடுவதாக தகவலை வெளியிட்டுள்ளனர்.    

படை வீரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு