ads
'மதுர வீரன்' ரிலீஸ் தேதியை அறிவித்த விஜயகாந்த்
வேலுசாமி (Author) Published Date : Dec 10, 2017 19:26 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் ‘மதுர வீரன்’. 'சகாப்தம்' படத்திற்கு பிறகு நடிகர் விஜயகாந்தின் இளையமகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக இந்த படத்தில் நடித்துள்ளார். வி.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக புதுமுக நாயகி மீனாட்சி நடிக்கிறார். இந்த படத்தில் சமுத்திரகனி, ‘வேல்’ ராமமூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டு விளையாட்டை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் டீசரை தொடர்ந்து, `என்னடா நடக்குது நாட்டுல' என்ற சிங்கிள் டிராக் ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது உடல்நல குறைவு காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சையை முடித்துவிட்டு, சமீபத்தில் சென்னை வந்து சேர்ந்த விஜயகாந்த் `மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, "#சண்முகபாண்டியன் நடிக்கும் #மதுரவீரன் திரைப்படம் 2018 பொங்கல் பண்டிகையன்று வெளிவருகிறது. இப்படத்தின் #என்னநடக்குதுநாட்டுல பாடல் நாட்டின் தற்போதைய அவல நிலையை தோலுரித்துக் காட்டுவதோடு, விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் இப்பாடல் ஒலிபரப்பப்படுகிறது. இப்பாடலை இயற்றிய கவிஞர் யுகபாரதி, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி மற்றும் முத்தையாவுக்கும், மதுரவீரன் படக்குழுவினருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
#சணà¯à®®à¯à®•பாணà¯à®Ÿà®¿à®¯à®©à¯ நடிகà¯à®•à¯à®®à¯ #மதà¯à®°à®µà¯€à®°à®©à¯ திரைபà¯à®ªà®Ÿà®®à¯ 2018 பொஙà¯à®•ல௠பணà¯à®Ÿà®¿à®•ையனà¯à®±à¯ வெளிவரà¯à®•ிறதà¯. இபà¯à®ªà®Ÿà®¤à¯à®¤à®¿à®©à¯ #எனà¯à®©à®¨à®Ÿà®•à¯à®•à¯à®¤à¯à®¨à®¾à®Ÿà¯à®Ÿà¯à®² பாடல௠நாடà¯à®Ÿà®¿à®©à¯ த‌றà¯à®ªà¯‹à®¤à¯ˆà®¯ அவல நிலையை தோலிரà¯à®¤à¯à®¤à¯à®•௠காடà¯à®Ÿà¯à®µà®¤à¯‹à®Ÿà¯, விழிபà¯à®ªà¯à®£à®°à¯à®µà¯ˆà®¯à¯à®®à¯ à®à®±à¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à¯à®•ிறதà¯. RKநகர௠இடைதà¯à®¤à¯‡à®°à¯à®¤à®²à®¿à®²à¯à®®à¯ இபà¯à®ªà®¾à®Ÿà®²à¯ ஒலிபரபà¯à®ªà®ªà¯à®ªà®Ÿà¯à®•ிறதà¯.
— Vijayakant (@iVijayakant) December 9, 2017
(1)