ads

'விக்ரம் வேதா' 100வது நாள் கொண்டாட்டம்

vikram vedha 100th day celebration

vikram vedha 100th day celebration

இயக்குனர் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் கடந்த ஜூலை 21-இல் வெளிவந்த படம் 'விக்ரம் வேதா'. இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர். வெளிவந்த முதல் நாள் முதல் தற்போது வரை மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் வரலட்சுமி, கதிர், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர்  முக்கிய  கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நேற்று சென்னையில் இந்த படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாதவன், விஜய்சேதுபதி, வரலட்சுமி, கதிர், ஷ்ரத்தா ஸ்ரீநாத், இயக்குனர் புஷ்கர் - காயத்ரி, சாம் சிஎஸ், தயாரிப்பாளர் சசிகாந்த் உள்ளிட்ட 'விக்ரம் வேதா' படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலந்துகொண்டு பேசும்போது "தர்மதுரை படத்திற்கு பிறகு 100 நாட்களை கடந்து ஓடும் படமாக 'விக்ரம் வேதா' அமைந்ததில் மகிழ்ச்சி. எனது கதாபாத்திரத்திற்கு பலரும் பலவிதமாக பாராட்டினார்கள். இந்த படத்தின் மூலம் பெரும்பான்மையான மக்களின் அன்பையும் நல்ல மதிப்பையும் சம்பாதித்துள்ளேன். இந்த படத்தில் என்னை வேறுவிதமாக காண்பித்த இயக்குனர் புஷ்கர் - காயத்ரிக்கு நன்றி. மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என்னுடைய வரலாற்றில் 'விக்ரம் வேதா' முக்கிய இடத்தில் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

vikram vedha 100th day celebrationvikram vedha 100th day celebration