ads

நடிகர் தனுஷுடன் மோதும் விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம்

நடிகர் தனுஷுடன் மோதும் விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம்

நடிகர் தனுஷுடன் மோதும் விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம்

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த மாதம் 5ஆம் தேதியில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த படம் 'ராட்சசன்'. புதுமுகமான ராம்குமார் இயக்கத்தில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் த்ரில்லர் படமாக வெளியான இந்த படத்திற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில், சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜகஜால கில்லாடி மற்றும் இடம் பொருள் ஏவல் போன்ற படங்கள் உருவாகியுள்ளது.

இதில் அறிமுக இயக்குனர் செல்லா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தில் விஷ்ணு விஷால், கில்மா கான் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஓவியா மற்றும் ரெஜினா ஆகிய இரு நாயகிகள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நாயகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் விஷ்ணு விஷால் பணிபுரிந்துள்ளார்.

இந்த படத்தின் வெளியீடு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த படம்  டிசம்பர் 21இல் வெளியாகவுள்ளது. அதே தேதியில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'மாரி 2' படமும் வெளியாகவுள்ளது. இதனால் வரும் டிசம்பர் 21இல் நடிகர் விஷ்ணு விஷாலும், தனுஷும் முதன் முறையாக மோதவுள்ளனர்.

நடிகர் தனுஷுடன் மோதும் விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம்