ads
பட்டுப்போன மரத்தை தனது விவசாய நண்பர் உதவியுடன் துளிர்விட செய்த விவேக்
வேலுசாமி (Author) Published Date : Sep 20, 2018 14:53 ISTபொழுதுபோக்கு
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக், தன்னுடைய முயற்சியால் இது வரை ஏராளமான மரங்களை நட்டுள்ளார். இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வரும் அப்துல்கலாமின் அறிவுரையின் பேரில், மரம் நடும் பழக்கத்தை தீவிரமாக கடைபிடித்து வரும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் மக்களிடையே நல்ல மதிப்பு இருந்து வருகிறது.
இவர் தற்போது 100 ஆண்டுகள் பழமையான மரத்தை தன்னுடைய முயற்சியால் மீண்டும் துளிர்விட செய்துள்ளார். மதுரை, உசிலம்பட்டியில் உள்ள பாப்பம்பட்டி என்ற கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடம்ப மரம் திடீரென பட்டுபோனது. இதனால் கவலை அடைந்த ஊர் மக்கள் டாக்டர் விஜயலட்சுமியிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
இவர் நடிகர் விவேக்கின் கவனத்திற்கு புகைப்படத்துடன் கொண்டு சேர்த்துள்ளனர். இதன் பிறகு அவர் தனது டிவிட்டரில், எனக்கு மரம் நடத்தெரியும், ஆனால் அதற்கு வைத்தியம் பார்க்க தெரியாது. இதை துளிர்விட என்ன செய்வது என்று மரத்தின் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவினை நடிகர் விவேக்கின் ரசிகர் மற்றும் விவசாயியான லால் பகதூர் என்பவர் கண்டுள்ளார்.
பின்னர் உடனடியாக தனது நண்பர்களின் உதவியுடன் மாட்டு சாணம், வேப்ப எண்ணெய் மற்றும் மஞ்சள் இவற்றை கொண்டு புவியியல் முறைப்படி பட்டுப்போன மரத்திற்கு வைத்தியம் பார்த்துள்ளார். மூன்று வாரங்கள் கழித்து மரம் துளிரிட வில்லை என்றால் மரம் இறந்தகாக அர்த்தம் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் மூன்று வாரங்கள் மூன்று மாதங்கள் ஆகியும் மரம் துளிர்விடாமலே இருந்தது.
திடீரென தற்போது பட்டுப்போன மரத்தில் துளிர் விட்டுள்ளன. இதனை கண்டு ஊர் மக்கள் பெரும்மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தன்னுடைய சிறு பதிவினால் இறக்கும் சூழ்நிலையில் உள்ள மரத்தை மீண்டும் துளிர்விட செய்த நடிகர் விவேக்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த முயற்சிக்கு காரணமாக இருந்த டாக்டர் விஜயலட்சுமி மற்றும் விவசாயி லால் பகதூர் ஆகியோரை விவேக் பாராட்டியுள்ளார்.
Dears! U remember? Some month bk, I tweeted that an 150 years old kadamba tree is dying at paapaapatti village. On my request @lalvivek went there n treated it. Look at the condition now! Plz, letz all thank him limitlessly! pic.twitter.com/VPfCU9KLMt
— Vivekh actor (@Actor_Vivek) September 16, 2018
நனà¯à®±à®¿ செனà¯à®±à¯ சேர வேணà¯à®Ÿà®¿à®¯à®¤à¯ @dinathanthi @lalvivek . நான௠ஒரà¯à®™à¯à®•à®¿à®£à¯ˆà®¤à¯à®¤à¯‡à®©à¯, அவà¯à®µà®³à®µà¯ தானà¯! https://t.co/vVt59EDSCw
— Vivekh actor (@Actor_Vivek) September 18, 2018