ads

மார்வல் ஸ்டுடியோஸின் அவெஞ்சர்ஸ் 4இல் இணைந்துள்ள எக்ஸ் மென்

லோகன் படத்தில் இறந்து போன வோல்வரின் மீண்டும் அவெஞ்சர்ஸ் நான்காம் பாகத்தில் உயிர்த்தெழுகிறார்.

லோகன் படத்தில் இறந்து போன வோல்வரின் மீண்டும் அவெஞ்சர்ஸ் நான்காம் பாகத்தில் உயிர்த்தெழுகிறார்.

மார்வல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இறுதியாக வெளியான 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' உலகம் முழுவதும் வசூலை குவித்து ரசிகர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கியது. இந்த படத்தில் 25 சூப்பர்ஹரோ ஒரே படத்தில் ஒன்றிணைந்து ஒரு வில்லனை எதிர்த்தும் அந்த போர் தோல்வியில் முடிந்தது. போரின் முடிவில் வில்லன் தானோஸ் ஒரே நொடியில் பிரபஞ்சத்தின் பாதி உயிர்களை சாம்பலாக்கினான்.

இதன் பிறகு எஞ்சியுள்ள சூப்பர் ஹீரோக்களை வைத்து மீண்டும் அந்த இன்பினிட்டி ஸ்டோனை கைப்பற்றி உயிர்களை மீட்பதற்கு மற்றொரு போரை அவெஞ்சர்ஸின் அடுத்த பாகத்தில் நடத்த உள்ளனர். அவெஞ்சர்ஸ் வரிசையில் நான்காம் பாகமான இந்த படம் தற்போது மும்முரமாக தயாராகி வருகிறது. இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் எக்ஸ் மேன் குடும்பத்தையும் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மியுடன்ட் (Mutant) குடும்பத்தில் பிரத்யேக மியுடன்ட்டாக சிவப்பு மந்திரவாதி (scarlet witch) உள்ளார். இவரை வைத்து எஞ்சியுள்ள சூப்பர்ஹீரோக்கள் தனோசை எதிர்த்து இன்பினிட்டி ஸ்டோனை கைப்பற்ற உள்ளனர். பின்னர் இன்பினிட்டி ஸ்டோனை வைத்து 300 வருடம் பின்னோக்கி செல்கின்றனர்.

இதனால் இறுதியாக வெளியான 'Logan' படத்தில் இறந்து போன வோல்வரின் (Wolverine) மீண்டு வரவுள்ளார். இதன்மூலம் மார்வல்ஸ் சூப்பர்ஹீரோக்கள் குடும்பத்தில் எக்ஸ் மென் குடும்பமும் ஒன்றிணைந்து தானோசை எதிர்க்க உள்ளனர். இது தவிர இந்த படத்தில் புரஃபஸர் எக்ஸ் (Professor X) மேக்னீடோ (Magneto) ஆகியோரும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்வல் ஸ்டுடியோஸின் அவெஞ்சர்ஸ் 4இல் இணைந்துள்ள எக்ஸ் மென்