ads

மீண்டும் நயன்தாராவுடன் ஹாரர் படத்தில் இணைந்துள்ள யோகிபாபு

நயன்தாராவின் ஐரா படத்தில் யோகி பாபு மற்றும் கலையரசன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

நயன்தாராவின் ஐரா படத்தில் யோகி பாபு மற்றும் கலையரசன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் விசுவாசம், சைரா நரசிம்ம ரெட்டி, இந்தியன் 2, லவ் ஆக்சன் டிராமா போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இந்த படங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு ஹாரர் படத்தில் இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நடித்து வருகிறார். மா, லட்சுமி போன்ற குரும்பப்படங்களை இயக்கிய இவருடைய இயக்கத்தில் முன்னதாக 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' வெளியானது. இதன் பிறகு நடிகை நயன்தாராவை வைத்து ஹாரர் படத்தை உருவாக்கி வருகிறார்.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இதன்படி இந்த படத்திற்கு 'ஐரா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா முதன் முறையாக இரட்டை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். சந்திரமுகி, மாயா, டோரா போன்ற படங்களுக்கு பிறகு மீண்டும் நயன்தாரா நடிப்பில் ஹாரர் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் காமெடி நடிகராக யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் நயன்தாராவுடன் ஹாரர் படத்தில் இணைந்துள்ள யோகிபாபு

முன்னதாக நயன்தாராவிற்கு ஜோடியாக யோகி பாபு 'கோலமாவு கோகிலா' படத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு மீண்டும் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க உள்ளார். இவருடன் நடிகர் கலையரசனும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு '8 தோட்டாக்கள்' படத்தின் இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கேஎஸ் என்பவர் இசையமைக்கிறார்.

மீண்டும் நயன்தாராவுடன் ஹாரர் படத்தில் இணைந்துள்ள யோகிபாபு

இந்த படத்தின் தயாரிப்பாளரான கோட்டபாடி கே ராஜேஷ் இந்த படம் குறித்து கூறுகையில் "அறம் படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாராவுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படமும் நயன்தாராவின் வெற்றி படங்களுள் ஒன்றாக இடம் பிடிக்கும். இயக்குனர் சர்ஜுன் இந்த படத்தின் கதையை சொன்னவுடன் அவர் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்று முடிவு செய்தோம். இந்த படம் ரசிகர்களுக்கு புது அனுபவமாகவும், நயன்தாராவிற்கு ஒரு சவாலான படமாகவும் இருக்கும். இந்த படத்திற்கு 'ஐரா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஐரா என்ற வார்த்தை யானையை குறிக்கும். நயன்தாராவின் கதாபாத்திரமும் யானையின் பலத்திற்கு ஈடான ஒரு கதாபாத்திரம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் நயன்தாராவுடன் ஹாரர் படத்தில் இணைந்துள்ள யோகிபாபு