ads
பார்ப்பதற்கு பயங்கரமாக இருப்பதால் தி நன் படத்தின் விடியோவை தடை செய்த யூடியூப்
ராசு (Author) Published Date : Aug 20, 2018 15:59 ISTபொழுதுபோக்கு
உலகின் பிரபலமான பொழுது போக்கு செயலியான யூடியூப் (Youtube), பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய பயத்தை உண்டாகக்கூடிய 'தி நன் (The Nun)' என்ற பேய் பட விடியோவை தடை செய்துள்ளது. 'தி கான்ஜுரிங் (The Conjuring)' பேய் பட வரிசையில் ஐந்தாவது படமாக அடுத்த மாதம் செப்டம்பர் 6இல் 'தி நன் (The Nun)' என்ற திகில் படம் வெளியாகவுள்ளது. பேய் என்றாலே தற்போது மக்களுக்கு பயத்தை வரவழைத்ததில் 'தி கான்ஜுரிங் (The Conjuring)' படக்குழுவினருக்கு முக்கிய பங்கு உண்டு.
ஹாலிவுட் படங்களில் உலகம் முழுவதும் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. இதன்படி முன்னதாக வெளியான கான்ஜுரிங் (Conjuring) வரிசையின் 4 படங்களும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பினை பெற்று மக்களை பயமுறுத்தி வந்தது. அந்த வகையில் தற்போது கான்ஜுரிங் படக்குழுவினரின் ஐந்தாவது திகில் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
இதனால் தற்போது இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. இதன்படி இந்த படத்தின் 6 வினாடி மட்டுமே அடங்கிய பயமுறுத்தும் வீடியோ ஒன்றினை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவில் பயங்கர சத்தத்துடன் திடீரென 'தி நன் (The Nun)' பேய் வந்து அனைவரையும் பயமுறுத்தி செல்கிறது. இதனை கண்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளானோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனை கண்ட பார்வையாளர் ஒருவர், "எச்சரிக்கை!!! யூடியூபில் சவுண்ட் குறைப்பது (Volume Sign) போன்ற வீடியோவை பார்க்கும் போது அதிர்ச்சியை தரக்கூடிய நன் (NUN) பேய் வெளிவரும். இந்த வீடியோ வரும் போது உங்கள் சவுண்டை குறைத்து கொள்ளுங்கள்" என டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த கருத்திற்கு பிறகு இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலானது. இதனை கண்டு யூடியூப் தனது டிவிட்டரில் "இதனை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. இந்த வீடியோ எங்களது கொள்கையை (Shocking content policy) பாதிக்கிறது. இதனால் இந்த விடியோவை தடை செய்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
Appreciate you bringing this to our attention! This ad violates our shocking content policy and it's no longer running as an ad. More info here: https://t.co/dOUocjUevh
— Team YouTube (@TeamYouTube) August 14, 2018