ads
காவேரி மருத்துவமனையில் திரளும் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தினர்கள்
புருசோத்தமன் (Author) Published Date : Aug 07, 2018 11:32 ISTPolitics News
நேற்று ஏற்பட்ட உடல்நிலை பின்னடைவினால் தற்போது திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு காவேரி மருத்துவமனை உயர் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களது அறிக்கையில் 24மணி நேரம் கெடு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை கருணாநிதி உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததாக எந்த அறிக்கையம் வராததால், திமுக தொண்டர்கள் மிகுந்த வருத்தத்துடன் காணப்படுகின்றனர்.
தற்பொழுது திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் மனைவி தயாளு அம்மாள் , மகள் கனிமொழி மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் ஆகியோர் காவேரி மருத்துவமனையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் கருணாநிதி உடல்நலம் குறித்து செய்திகள் தொடர்ந்து பரவுவதால், தொண்டர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் கருணாநிதி உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட உள்ள அறிக்கைக்காக ஏராளமான பொது மக்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்புடன் காத்து கொண்டிருக்கின்றனர்.
#Karunanidhi #KarunanidhiHealth #KauveryHospital