ads
பெண் பத்திரிகையாளர் பற்றிய அநாகரிக கருத்திற்கு எஸ்வி சேகர் மன்னிப்பு
வேலுசாமி (Author) Published Date : Apr 20, 2018 15:27 ISTPolitics News
தற்போது தமிழகத்தில் நிலவி போராட்டங்களை மக்களிடமிருந்து நீக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போராட்டங்களை அடக்க சில அரசியல் புண்ணியவான்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்துவதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களும் ஊடகங்களும், செய்தித்தாள்களும் அதன் பக்கம் திரும்புவதால் போராட்டத்தையே மறந்து விடுகின்றனர். முன்னதாக பாஜகவை சேர்ந்த ஹச் ராஜா தன்னுடைய கருத்தால் சர்ச்சை கருத்தினை பதிவிட்டு அமைதியாகி விட்டார்.
ஆனால் பொதுமக்கள் அரசியல் தலைவர்கள் என அனைவரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து #எச்ச_ராஜா என்ற வார்த்தையும், இவரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதற்கென்று போராட்டமும் நடைபெற்றது. இதன் பிறகு தமிழக ஆளுநர், நிர்மலா தேவி விவகாரரத்தின் போது பெண் பத்திரிகையாளர் கன்னத்தை தடவியதால் அதுவும் பெரும் சர்ச்சையாக மாறியது.பின்னர் ஆளுநருக்கு எதிராக பொதுமக்கள் பல முரண்பாடற்ற கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இதனை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்வி சேகர் என்பவர் ஊடகங்களுக்கு எதிராக தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பேஸ்புக்கில் கருத்து ஒன்றினை பதிவு செய்தார்.
இவரின் இந்த தகாத கருத்து பெண் பத்திரிகையாளர் மற்றும் பெண் அரசியல் தலைவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்த பிறகு பதிவு செய்த கருத்தினை நீக்கி விட்டார். தற்போது இவரின் அநாகரிகமான கருத்திற்கு ஏராளமானோர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஏதேனும் போராட்டங்கள் எதிர்ப்புகள் போன்றவை நடைபெறும் போது, மக்களை திசை திருப்ப அரசியலில் பயன்படுத்தப்படும் கேவலமான செயல் தான் சர்ச்சை கருத்து.