ads
நடிகர்களாக அரசியலில் களமிறங்குவது நாட்டிற்கு பேரழிவு - நடிகர் பிரகாஷ்ராஜ்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Nov 13, 2017 14:15 ISTPolitics News
நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் அவ்வப்போது சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் தனது சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிடுவார். தற்போது கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் அரசியலில் எப்போது களமிறங்குவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏற்கனவே கமல்ஹாசன் கட்சி தொடங்குவது பற்றி அதிகார்பூர்வ அறிவிப்பையும் அதை செயல்படுத்த புதிய செயலிகளையும் அமல்படுத்தியுள்ளார். ரஜினிகாந்த் தரப்பில் இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு தெரிவிக்காத நிலையில் அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12-இல் இது பற்றி தெரிவிப்பார் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இந்நிலையில் பெங்களூரில் நடிகர் பிரகாஷ்ராஜ் பத்திர்கையாளர் சந்திப்பில் நடிகர்கள் தங்களது பிரபலத்தை வைத்து அரசியலில் ஈடுபடுவது ஏற்கத்தக்கது அல்ல. இது நாட்டிற்கு கேடு. ஒரு நடிகனாக அரசியலில் களம் இறங்காமல் ஒரு குடிமகனாக மக்களின் குறைகளை கேட்டறிந்து அதை தீர்க்கும் வகையில் ஈடுபடவேண்டும். மேலும் மக்கள் ஒரு நடிகரின் ரசிகர் என்ற பெயரில் வாக்களிக்காமல் ஒரு இந்திய குடிமகனாக வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் கமல் ஹாசன் மற்றும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.