ads

தனது பிறந்த நாளில் கமல் ஹாசன் அறிவித்த செயலியும் அவர் அளித்த பேட்டியும்

தனது பிறந்த நாளில் கமல் ஹாசன் அறிவித்த செயலியும் அவர் அளித்த பேட்டியும்

தனது பிறந்த நாளில் கமல் ஹாசன் அறிவித்த செயலியும் அவர் அளித்த பேட்டியும்

இன்று நடிகர் கமல் ஹாசனின் 63வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். தற்போது  நற்பணி இயக்கம் சார்பில் ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் குறைகளை தீர்க்கவும் குறைகளை கண்டறியவும் புதிய செயலியை அறிமுகப்படுத்தினார். #KH, #theditheerpomvaa, #maiamwhistle, #virtuouscycle போன்றவை. இந்த செயலிகள் தொலைத்தொடர்பு சாதனம் போன்றவை. ஜனவரியில் முழுவீச்சில் வெளிவரும் என்று தெரிவித்தார். இதனை அடுத்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். 

"நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன். இதிலிருந்து வெளியே போக மாட்டேன். ஊழலில் சிக்கியவர்களுக்கு இங்கு இடமில்லை நான் நல்ல தமிழ்நாட்டை உருவாக்க நினைக்கிறேன். கொசஸ்தலையாற்றில் பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்சனையை நான் சென்று பார்த்த பின்னர் தான் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அந்த பகுதியின் குறுக்கே கட்டப்பட்ட மணலை அகற்றும் பணி தொடங்கியிருக்கிறது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்து தீவிரவாதம் குறித்த எனது கருத்துக்கு வரும் எதிர்ப்புகளை நான் எதிர்கொள்வேன். யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. வன்முறையை எந்த சமயத்தினரும் கையில் எடுக்க கூடாது. எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. என்னை இந்து சமய விரோதி என்று சித்தரித்தார்கள், நான் பிறந்தது பிராமண குலம் என் குடும்பத்தார் இன்னும் அதே மதத்தில் வாழ்கின்றனர். நான் பிறந்தது பாலச்சந்தர் என்னை அறிமுகப்படுத்தியது தவிர அதை தேடி போனதில்லை. அதில் இருந்து விலகி வந்திருக்கிறேன். 

என்னை நாஸ்திகன் என்று கூறுகிறார்கள் அதை நான் விரும்பவில்லை. நான் பகுத்தறியவே விரும்புகிறேன். மேலும் நான் கட்சி ஆரம்பிக்க அஸ்திவாரம் வலுவாக இருக்க வேண்டியுள்ளதால் முன்னேற்பாடுகள் தேவை. நான் இப்போதுதான் கர்ப்பமாக இருக்கிறேன் குழந்தை பிறக்கும் முன்னால் அதற்கு பெயர் வைக்கக்கூடாது அது ஆணா பெண்ணா என்றறிந்து அதற்கேற்றவாறு பெயர் சூட்டவேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன்னாள் மக்கள் நலனுக்கு 'தேடித்தீர்ப்போம் வா' என்ற புத்தகத்தை எழுதியிருந்தேன் அது போல தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். மக்களுக்கு நல்லது செய்யும் எளிமையான முயற்சிதான் அரசியல். நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவதே எனது கனவு" என்று அவர் தெரிவித்தார்.

தனது பிறந்த நாளில் கமல் ஹாசன் அறிவித்த செயலியும் அவர் அளித்த பேட்டியும்