ads
ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - பள்ளிக்கல்வி துறை
புருசோத்தமன் (Author) Published Date : Nov 07, 2017 16:15 ISTஇந்தியா
தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளை விமர்சிக்கும் வகையில் பேஸ்புக் மற்றும் வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்களில் கார்ட்டூன்கள், படங்கள், கேலி சித்திரங்கள், வீடியோக்கள், மீம்ஸ் படங்கள் என அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றனர். போலீசார் விசாரணையில் சமூக வலைதள பதிவுகளை பதிவிடுவோர் எண்ணிக்கையில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 25 சதவீதம் உள்ளனர். இது குறித்து போலீசாரும் கல்வி அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இதில் வரம்பு மீறி சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரப்புவோர், ஒழுக்கக்கேடாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களை 'சஸ்பெண்ட்' செய்ய மாவட்ட அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை உயரதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். இதனை அடுத்து புகாருக்கு உள்ளான ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் முதற்கட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். வரும் காலங்களில் ஆசிரியர்கள் மீது புகார்கள் வந்தால் விசாரணை ஏதும் இன்றி சஸ்பெண்ட் செய்யப்படுவதுடன் போலீசார் வழியாக கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.