ads

மின் வாரியத்தின் அலட்சியத்தால் 2 சிறுமிகள் பலியான பரிதாபம்

மின் வாரியத்தின் அலட்சியத்தால் 2 சிறுமிகள் பலியான பரிதாபம்

மின் வாரியத்தின் அலட்சியத்தால் 2 சிறுமிகள் பலியான பரிதாபம்

மழை வருவதால் ஒருபுறம் மகிழ்ச்சியடைந்துள்ளனர் விவசாயத்தினர் மறுபுறம் ஆபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. ஆங்காங்கே உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை அடுத்து சென்னையில் கொடுங்கையூர், ஆர்.ஆர். நகர் பகுதியில் வீட்டின் முன்பு பாவனா, யுவஸ்ரீ உள்ளிட்ட 5 சிறுமிகள் விளையாடி வந்துள்ளனர். அங்கே முறையான பாதுகாப்பில்லாமல் இயங்கிய மின் பெட்டியின் மூலம் மின் கசிந்து பாவனா, யுவஸ்ரீ 2 பேரும் சிக்கி உயிரழந்தனர். 

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மின் வாரியத்தின் அலட்சியமே இந்த குழந்தைகளின் உயிரை பலி வாங்கிவிட்டது. எத்தனயோ முறை புகார் தெரிவித்தும் மின்வாரியம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, மின் வாரிய அதிகாரிகள் அவர்கள் கடமையை செய்ய பணம் கேட்பதாகவும், இது குறித்து புகார் தெரிவித்தபோது நீண்ட நேரம் ஆகியும் அதிகாரிகள் வரவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சிறுமிகளின் இழப்பிற்கு காரணமாக இருந்த மின்வாரியத்தின் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட ஐந்து பேரை மின்வாரியம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. பலியான சிறுமிகளின் குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் அளிப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

இச்சம்பவம் மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான மக்கள் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் சிறுமிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் தந்தால் மட்டும் போதாது இது போன்ற சம்பவங்கள் நடக்காத்திருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மின் வாரியத்தின் அலட்சியத்தால் 2 சிறுமிகள் பலியான பரிதாபம்