ads
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியீடு
மோகன்ராஜ் (Author) Published Date : Aug 16, 2018 12:50 ISTPolitics News
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்து 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அவருடைய சமாதியில் தற்போது வரையிலும் பொது மக்களும், பிரபலங்களும் அவருடைய சமாதிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை மோசமான சூழ்நிலைக்கு சென்றுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர் 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ளார். இவருக்கு தற்போது 93வயதாகிவிட்ட நிலையில் அவருடைய உடல்நிலை காரணமாக கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அவர் மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் எய்ம்ஸ் மருத்துவமனை நோக்கி படையெடுத்து செல்கின்றனர். இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் "முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
துரதிஷ்டவசமாக கடந்த 24 மணிநேரத்தில் அவருடைய உடல்நிலை மோசமாக பின்தங்கியுள்ளது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வந்துள்ளனர்.