ads
மூன்று மாநில தேர்தலில் ஆட்சியை பிடிக்க போவது யார்
வேலுசாமி (Author) Published Date : Mar 03, 2018 10:16 ISTPolitics News
வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த திரிபுரா, மேகாலயா, நாகலாந்து போன்ற மாநிலங்களில் மாநில சட்டசபை பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. இதனையொட்டி தேர்தல் கமிஷன் அங்கு தேர்தலை நடத்த முடிவு செய்தது. அதன்படி திரிபுராவில் கடந்த மாதம் 18-ஆம் தேதியும், மேகாலயா மற்றும் நாகலாந்து போன்ற மாநிலங்களில் கடந்த மாதம் 27-ஆம் தேதியும் தேர்தல் நடந்தது.
மேலும் நடந்து முடிந்த அந்த தேர்தலில் திரிபுராவில் 74 சதவீதமும், மேகாலயாவில் 67 சதவீதமும், நாகாலாந்தில் 75 சதவீத ஓட்டுக்களும் பதிவானது. இந்த மூன்று மாநிலங்களிலும் தலா 60 தொகுதிகள் உள்ளது. ஆனால் மூன்று மாநிலங்களிலும் 59 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டது.
மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கொல்லப்பட்டதாலும், திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் மரணம் அடைந்தாலும் அங்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் வடக்கு அங்காமி2 தொகுதியில் தேசியவாத ஜனநாயக கட்சி தலைவர் நெய்பியூ ரியோ போட்டியின்றி வென்றதால் மீதமுள்ள 59 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது.
இதன் பிறகு நடந்த மூன்று மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகிறது. சமீப காலமாக பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு நாடெங்கும் அதிகரித்து வருவதால் பாஜக வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இதனால் நாடு முழுவதும் பாஜக மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.