தமிழகத்தில் அம்மா ஆட்சி அமைக்க டிடிவி தினகரனின் புதிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்

       பதிவு : Mar 15, 2018 12:10 IST    
கருப்பு வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் தினகரனின் புதிய கட்சி கோடி. கருப்பு வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் தினகரனின் புதிய கட்சி கோடி.

மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் அதிமுக கட்சி, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு மூன்று அணிகளாக உடைந்தது. பின்னர் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் கூட்டு சேர்ந்தனர். இதன் பிறகு அதிமுக கட்சியும், இரட்டை இலை சின்னமும் யாருக்கு சொந்தம் என்று விவாதங்கள் கடுமையாக நிகழ்ந்து வந்தது. இரட்டை இலையும், அதிமுக கட்சியும் ஓ பன்னீர் செல்வத்திற்கே சொந்தம் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குடும்பத்தினர் ஜெயிலில் தள்ள டிடிவி தனியாகவே போராடி வந்தார். இதனை அடுத்து டிடிவி ஆர்கே நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார். இந்த குக்கர் சின்னத்திற்கும் கடும் போட்டி நிலவ, டெல்லி உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், சமீபத்தில் குக்கர் சின்னத்தையும், தினகரன் பரிந்துரைத்த மூன்று கட்சி பெயரில் ஒன்றை தேர்வு செய்யவும் தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் பிறகு புதிய கட்சியை தொடங்கி தமிழகத்தில் அம்மா ஆட்சி அமைய பாடுபடுவோம் என அறிவித்தார். இந்நிலையில் புதிய கட்சியின் பெயரையும் சின்னத்தின் கொடியையும் அறிமுகப்படுத்தும் விழா இன்று காலை மதுரையில் நடந்துள்ளது. இந்த விழாவுக்காக மேலூர் அழகர் கோவில் ரோட்டில் பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டது.

 

இந்த விழாவில் காலை 10 மணியளவில் தினகரன் கலந்து கொண்டார். இவருடைய வருகைக்காக வழிநெடுக தோரணங்களை கட்டி ஆதரவாளர்கள் டிடிவியை மெய் சிலிர்க்க வைத்தனர். மேடைக்கு வந்த தினகரன் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனது புதிய கட்சியின் பெயரையும், கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் ஜெயலலிதா உருவப்படம் அமைந்த கட்சியின் கொடியும் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

பிரமாண்டமாக அமைக்க பட்ட இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தினகரன் துவங்கியுள்ளார்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தினகரன் துவங்கியுள்ளார்.

தமிழகத்தில் அம்மா ஆட்சி அமைக்க டிடிவி தினகரனின் புதிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்