ads

தேமுதிக மேடை பேச்சு வேறு அரசியல் கூட்டணி வேறு

தேமுதிக மேடை பேச்சு வேறு அரசியல் கூட்டணி வேறு

தேமுதிக மேடை பேச்சு வேறு அரசியல் கூட்டணி வேறு

கடந்த சில வருடங்களாக தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளை மேடைகளில் அனல்பறக்க பேசிய தேமுதிக கட்சி இன்று கூட்டணி பேரம் நடத்திக்கொண்டு இருப்பது மக்களை யோசிக்க வைக்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் மக்கள் மனத்தில் நீங்கா இடம்பெற்றவர், நிர்வாக திறமை கொண்டவர், நடிகர் சங்க தலைவராக இருந்த போது அவர் செய்த சாதனைகள் பெரிது. இன்று சற்று உடல்நிலை குறைவு இருந்தாலும் அவரின் கம்பீரம் இன்றும் அப்படியே இருக்கிறது.

சில தினங்களுக்கு முன் தங்களை பெரிய கட்சிகள் தினமும் வீட்டிற்கு வந்து தங்களிடம் கூட்டணி வைத்துக்கொள்ளுமாறு கேட்கின்றனர் என்று தேமுதிக கூறியது. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்து கொண்டு அடுத்த கட்ட வேளையில் இறங்கிவிட்டது. இந்நிலையில் அதிமுக மற்றுமே தேமுதிக கட்சியின் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது. இவர்களின் பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்க, இப்பொழுது தேமுதிக திமுகவிடம் கூட்டணிக்காக வந்துள்ளது, இருந்தாலும் எங்களிடம் பங்கீடு செய்ய எந்த தொகுதியும் இல்லை என்று கையை விரித்துள்ளதை அக்கட்சியின் மூத்த அமைச்சர் திரு துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்நிலை சென்றால், தேமுதிக தனித்து நிற்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்படும். கடந்த தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாத தேமுதிக தனித்து போட்டியிட்டால்  நிலை என்ன...

தேமுதிக மேடை பேச்சு வேறு அரசியல் கூட்டணி வேறு