கருணாநிதி உடல் நலம் குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை

       பதிவு : Aug 07, 2018 10:50 IST    
Karunanidhi Health latest updates Karunanidhi Health latest updates

நேற்று வந்த காவேரி மருத்துவமனை அறிவிப்பின்படி திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை பின்னடைவை சந்தித்ததாக அறிக்கை வெளியிட்டனர். தகவல் அறிந்து திரு முக ஸ்டாலின் அவர்களும், திரு அழகிரி அவர்களும் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். இந்த செய்தி வெகுவாக பொது மக்களிடையே பரவியவுடன், மீண்டும் காவேரி மருத்துவமனையை நோக்கி திமுக தொண்டர்கள் படையெடுத்து வரத்தொடங்கி உள்ளனர்.

இதன் பிறகு தற்போது திமுக தொண்டர்கள் கருணாநிதி நலம் பெற தொடர்ந்து பிராத்தனை செய்தும், அவர்களின் அன்பை வெளிப்படுத்தியும் வருகின்றனர். மேலும் இன்று காலையில் வந்த தகவல்படி, உடல் நலத்தில் கருணாநிதி சற்று பின்தங்கியுள்ளதால் மருத்துவர்கள் அவரை தீவிர கண்கணிப்பில் வைத்துள்ளதாக கூறியுள்ளனர். இதனால் தற்போது எங்களுடைய தலைவர் உடல்நல குறைவில் இருந்து மீண்டு விரைவில் வீடு திரும்ப வேண்டும் என தொண்டர்கள் பிராத்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.


கருணாநிதி உடல் நலம் குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை


செய்தியாளர் பற்றி

தங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க

rasu editor and writer

ராசுசெய்தியாளர்