ads
ஓசி பிரியாணி கிடைக்காததால் பிரியாணி கடையை சூறையாடிய திமுக தொண்டர்கள்
மோகன்ராஜ் (Author) Published Date : Aug 01, 2018 17:42 ISTPolitics News
தற்போது திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவர் இறந்துவிட்டதாக தவறான செய்திகளும் அதற்கென கலவரங்களும் ஒரு சில இடங்களில் நடைபெற்று வருகின்றன. இதனால் காவேரி மருத்துவமனை வாசலில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதி வீடு திரும்ப பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த செய்தி அறிந்து ராகுல் காந்தி, ரஜினிகாந்த், விஜய், உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் நேரில் சென்று கருணாநிதி உடல்நலம் குறித்து முக ஸ்டாலினிடம் நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை திமுக தொண்டர்கள் ஒரு பிரியாணி கடையில் இலவசமாக பிரியாணி கேட்டு கடையை சூறையாடிய சம்பவம் வைரலாக பரவி வருகிறது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள 'RR அன்பு பிரியாணி கடை'யில் இந்த தகராறு நிகழ்ந்துள்ளது. இந்த தகராறு சம்பவமானது சென்னை திமுக தொண்டரணி நிர்வாகியான யுவராஜ் தலைமையில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் கடை முதலாளி மற்றும் ஊழியர்களை திமுக தொண்டர்கள் என வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் பாக்சிங்கில் பலமாக தாக்கியுள்ளது. இது தவிர கடையையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த செய்தியறிந்து நெட்டிசன்கள் திமுகவை வறுத்தெடுத்து வருகின்றனர். ஏற்கனவே இடுப்பு கிள்ளி திமுக என்று டிவிட்டரில் வைரலாகி வந்த நிலையில் தற்போது ஓசிபிரியாணிதிமுக என்ற வார்த்தை வேகமாக பரவி வருகிறது.
DMK student wing leader Yuvraj caught on camera beating up restaurant staff in Chennai. Cause unclear. Via @AkshayaNath @IndiaToday pic.twitter.com/PDLi4O7ibt
— Shiv Aroor (@ShivAroor) August 1, 2018