ads
கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு இறந்துவிட்டதாக அறிவித்த கூகுள்
வேலுசாமி (Author) Published Date : Mar 09, 2018 15:07 ISTPolitics News
பிரபல அரசியல்வாதி மற்றும் தற்போதைய கூட்டுறவு துறை அமைச்சராக செல்லூர் ராஜு பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியில் இருந்து தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அரசின் கூட்டுறவு துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
இதன் பிறகு கடந்த 2016-ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்து கூட்டுறவு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை சார்ந்தவர். இவர் கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் நீரின் அளவு ஆவியாகாமல் தடுக்க தெர்மோகோலை வைத்து மூடும் புதுவித முயற்சியை கையாண்டவர்.
ஆனால் இந்த சோதனை முயற்சி படு தோல்வியை தழுவியது. இதன் மூலம் கூட்டுறவு துறை அமைச்சரான செல்லூர் ராஜு நாடு முழுவதும் ஒரே நாளில் பிரபலமானார். அடுத்தடுத்து இவரது புதுவித முயற்சியை எதிர்பார்த்து இவரது ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இவர் இறந்து விட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது. அதுவும் இவர் கடந்த 2012-ஆம் ஆண்டே ஜூன் மாதம் 24-ஆம் தேதி இறந்துவிட்டதாக கூகுள் செல்லூர் ராஜின் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.