ads

ஹச் ராஜாவை கைது செய்ய வேண்டும் நடிகர் சத்யராஜ் கடும் எதிர்ப்பு

பெரியாரை பற்றி கருத்து தெரிவித்த ஹச் ராஜாவுக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் நடிகர் சத்யராஜ் ஹச் ராஜாவை கைது செய்யக்கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

பெரியாரை பற்றி கருத்து தெரிவித்த ஹச் ராஜாவுக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் நடிகர் சத்யராஜ் ஹச் ராஜாவை கைது செய்யக்கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

சமீபத்தில் திரிபுரா, நாகாலாந்து, மேகாலாயா போன்ற மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் திரிபுரா மாநிலங்களில் மட்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றி மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் தோல்வியுற்றது. திரிபுராவில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் அங்கு முன்னதாக இருந்த சிறந்த எழுத்தாளர் மற்றும் சோவியத் யூனியனின் முன்னாள் தலைவர் லெனின் என்பவரின் சிலை அகற்றப்பட்டது.

இது குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹச் ராஜா "லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. இன்று திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை சாதி வெறியர் பெரியார் சிலை" என்று சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டு அகற்றியுள்ளார். இதன் பிறகு சமூக ஆர்வலர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் ஏராளமான அரசியல் பிரமுகர்களிடையே ஹச் ராஜாவுக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. கடும் எதிர்ப்புகள் கிளம்பிய பிறகு ஹச் ராஜா இந்த கருத்தை நான் பதிவிடவில்லை என்று சமாளித்து வருகிறார்.

பெரியார், பெண் விடுதலை, மூட நம்பிக்கை, பிரிவினை போன்றவற்றை எதிர்த்து போராடியவர். இவர் திராவிட கழகத்தை தோற்றுவித்தவர். இவருடைய கால கட்டத்தில் இந்தி கட்டாய மொழியாக பள்ளி கூடங்களில் இருந்தது. இதனை எதிர்த்து 'தமிழ்நாடு தமிழருக்கே' என முழக்கங்களை எழுப்பி மாபெரும் இந்தி போராட்டத்தை நடத்தியவர். இவரின் நினைவாக ஈரோடு இல்லத்தை தமிழக அரசு பெரியார் நினைவு இல்லமாக மாற்றியுள்ளது. அங்கு அவருக்கு மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏராளமான மக்கள் வாழ்வின் முன்னோடியாக திகழும் பெரியார் அவர்களின் சிலையை உடைப்பதாக கருத்து தெரிவித்த ஹச் ராஜாவை கைது செய்ய கோரி ஏராளமான மக்கள் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சத்யராஜ் ஹச் ராஜாவுக்கு எதிராக வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் "தோழர் மற்றும் புரட்சியாளர் லெனின் சிலை திரிபுராவில் உடைக்கப்பட்டதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

நாளை பெரியார் சிலை உடைக்கப்படும் என கூறிய ஹச் ராஜாவை கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியார் என்பது சிலையல்ல, பெயரல்ல, உருவமல்ல, ரத்தமும் சதையும் சார்ந்த மனித பிறவியும் அல்ல, பெரியார் ஒரு தத்துவம், பெண் விடுதலைக்காக உழைக்கும் மக்களின் விடுதலைக்காக மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட சித்தாந்தம்.

அவர் சிலையாக மட்டும் இல்லை, எங்களை போன்ற மக்களின் உள்ளங்களிலும் வாழ்ந்து வருகிறார். பதவி, ராணுவம், செல்வாக்கு இவற்றை மட்டும் வைத்து எங்களின் உள்ளங்களின் குடியிருக்கும் பெரியாரை அகற்ற முடியாது. நேரம் குறித்து தேதி குறித்தாள் பெரியார் தொண்டர்கள் சவாலுக்காக தயாராக உள்ளார்கள். ஹச் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக அரசு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகர் சத்யராஜ், கடந்த 2007-இல் பெரியாரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் பெரியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு மனைவியாக நடிகை குஷ்பூ நடித்திருந்தார். மேலும் நடிகை குஷ்பூவும் ஹச் ராஜாவை 'எச்சை ராஜா' என கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஹச் ராஜாவை கைது செய்ய வேண்டும் நடிகர் சத்யராஜ் கடும் எதிர்ப்பு