ads

லட்சக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு நடுவே நல்லடக்கம் செய்யப்பட்ட வீரத்தமிழன்

அண்ணா சமாதிக்கு அருகே புதைக்கப்பட்டார் கலைஞர் கருணாநிதி.

அண்ணா சமாதிக்கு அருகே புதைக்கப்பட்டார் கலைஞர் கருணாநிதி.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மறைந்த பிறகு அவரது உடல் 8 மணியளவில் கோபாலபுரம் இல்லம் கொண்டு செல்லப்பட்டு குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிறகு அதிகாலை 4 மணியளவில் ராஜாஜி அரங்கில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதிகாலை முதல் தற்போது வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஏராளமான அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவரின் உடல் மீது மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி கருணாநிதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இதனை அடுத்து,  மாலை 4 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடல் ஏற்றப்பட்டு லட்சக்கணக்கான பொது மக்களின் கண்ணீருக்கு நடுவே அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது.

பின்னர் இந்த ஊர்வலம் அண்னா சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை வழியாக சென்றது. வழிநெடுக அவரது தொண்டர்கள் கலைஞர் வாழ்க என்று கோஷம் எழுப்பியபடியே வந்தனர். பிறகு காமராஜர் சாலை வழியே வந்த அவரது உடல் அண்ணா சதுக்கத்தை வந்தடைந்தது.

அண்ணா சமாதிக்கு அருகிலே அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவருக்கு முழு அரசு மரியாதையும் அளிக்கப்பட்டது. பிறகு கருணாநிதியின் உடலுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்’ என எழுதப்பட்ட சந்தன சவ பெட்டியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

லட்சக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு நடுவே நல்லடக்கம் செய்யப்பட்ட வீரத்தமிழன்