ads
கண்ணீர் அஞ்சலி திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி
புருசோத்தமன் (Author) Published Date : Aug 08, 2018 11:32 ISTPolitics News
கடந்த 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி,நேற்று இரவு 6:10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 94 வயதான இவருக்கு ஜூலை 25ஆம் தேதியில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. பின்பு அவருக்கு மருத்துவர்கள் வீட்டிற்கு விரைந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் ரத்த அழுத்தம் பாதிப்படைய தொடங்கியது. இதனால் அவரை 27ஆம் தேதியில் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
இதன் பிறகு அவரது ரத்த அழுத்தம் சீரான நிலையில் கடந்த மாதம் 29ஆம்தேதியில் மீண்டும் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. பின்னர் அவரை 24 மணிநேரமும் மருத்துவர்கள் கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் கருணாநிதியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அவரது குடும்பத்தினர் மற்றும் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் அவரை சந்திக்க காவேரி மருத்துவமனைக்கு விரைந்தனர்.
ஆயிரகணக்கான தொண்டர்களும் மருத்துவமனை வாசல் முன்பு கோஷம் எழுப்பியபடி வந்தனர். ஆனால் தற்போது தொண்டர்கள் பிரார்த்தனை நிறைவேறாமல் திமுக தலைவர் கருணாநிதி தன்னுடைய 94வது வயதில் உயிர் பிரிந்துள்ளார். இவருடைய இழப்பை தாங்க முடியாமல் தமிழகம் முழுவதுமுள்ள அவரது லட்சக்கணக்கான தொண்டர்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.
அவரது உடல் பொது மக்களின் பார்வைக்காக வைக்க உள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி இறந்துள்ள நிலையில் அவரது தொண்டர்கள் ஏராளமான இடங்களில் கலவரங்களில் ஈடுபட்டுள்ளனர். கலவரங்களை அடக்க தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கலைஞர் கருணாநிதியின் இழப்பினால் தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடந்து வருகிறது . தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காமல் வெறிசோடி காணப்படுகிறது.