ads
ஜெயலலிதா சிலையில் மாற்றங்கள் செய்யப்படும் அமைச்சர் ஜெயக்குமார்
வேலுசாமி (Author) Published Date : Feb 26, 2018 12:43 ISTPolitics News
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவம் பொருந்திய சிலை நேற்று முன்தினம் அதிமுக அலுவலம் முன்பு திறக்கப்பட்டது. இந்த சிலை ஜெயலலிதா முகம் போன்று இல்லை, நடிகை வடிவுக்கரசி, அவ்வை சண்முகி, அரசியல் பிரமுகர் வளர்மதி, சசிகலா, எடப்பாடி பழனிசாமி மனைவி ஆகியோர் போன்று உள்ளது என சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்தும், கேலி செய்தும் வந்தனர்.
மேலும் இந்த சிலையில் உயிரோட்டம் இல்லை என கட்சி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே 'இந்த சிலை ஜெயலலிதா போன்று இல்லை' என ஜெ. தீபாவும், 'ஜெயலலிதாவின் சிலையில் கம்பீரம் இல்லை' என தினகரனும், 'இந்த சிலை ஜெயலலிதா சிலையே இல்லை' என திவாகரனும் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரிடம் செய்தியாளர்கள் சிலையில் மாற்றம் வருமா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை திறந்தது அதிமுக ஆதரவாளர்கள் அனைவரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சிலை தொடர்பாக சமூக வலைத்தளத்தில் ஏராளமான விமர்சனங்கள் வருகிறது. இதன் அடிப்படையில் சிலையில் மாற்றம் கொண்டு வர தலைமை கழகம் உரிய நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அமைச்சர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில் "ஜெயலலிதாவின் வடிவமைப்பில் உருவாகியுள்ள சிலை,நிறங்களிலும் வடிவமைப்பிலும் மாற்றங்களும் அதற்கான கருத்துக்கள் வெளிவருவதும் வழக்கமானது தான். எங்களின் சிந்தனைகளும் நோக்கங்களும் ஜெயலலிதாவின் எண்ணங்களை வலுப்படுத்தும் வகையில் இருக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.