ads

காவலரைத் தாக்கும் வீடியோவில் சீமான். ரஜினிகாந்தின் ட்விட்டர் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.

ரஜினிகாந்தின் ட்விட்டர் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு. ரஜினியின் ட்விட்டர் வீடியோவில் சீமான் ImageCredit: Twitter @MinisterJayaku1 @rajinikanth

ரஜினிகாந்தின் ட்விட்டர் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு. ரஜினியின் ட்விட்டர் வீடியோவில் சீமான் ImageCredit: Twitter @MinisterJayaku1 @rajinikanth

தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ட்விட்டர் கருத்தை வரவேற்றுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபில் போட்டியை தடை செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் போலீஸ்காரர் ஒருவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ பதிவில், மேலும் சில இளைஞர்கள் மற்றொரு போலீஸ்காரரை தாக்க முற்பட்டனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள், அந்த இளைஞர்கயையும் போலீஸ்காரரையும் விலக்கிவிட்டார்.   

இது தொடர்பான வீடியோ காட்சியை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார், ரஜினிகாந்த் . மேலும், இதனைக் கண்டிக்கும் விதமாக,  ரஜினிகாந்த் கூறிய கருத்தில், சீருடையில் இருக்கும் காவலர்கள் தாக்கப்பட்டது வன்முறையின் உச்சகட்டம் என்றும் இத்தகைய வன்முறைக்  கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்தாக்கிவிடுமென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், இத்தகைய குற்றவாளிகளை  தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்கள் இயற்றப் படவேண்டும் என்று வலியுறுத்தினார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பதிவும் ரஜினியின் கருத்தும் தற்போது வைரலாகி வருகின்றன. 

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், எந்த மாதிரியான வன்முறையும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய  குற்றத்திற்கான சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. அதன்படி, எவராயினும் தண்டிக்கப்படுவர் என்று கூறினார். 

காவலரைத் தாக்கும் வீடியோவில் சீமான். ரஜினிகாந்தின் ட்விட்டர் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.