ads

மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கணவரை பார்க்க பரோலில் வெளிவரவுள்ள சசிகலா

சசிகலாவின் கணவர் கவலைக்கிடம் பரோலில் மீண்டும் கணவரை பார்க்க வருகிறார் சசிகலா.

சசிகலாவின் கணவர் கவலைக்கிடம் பரோலில் மீண்டும் கணவரை பார்க்க வருகிறார் சசிகலா.

மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த 2017 அக்டோபர் மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இவருடைய கல்லீரல், சிறுநீரகம் இரண்டையும் மாற்றும் நிலை உருவானது. இதன் பிறகு தஞ்சையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இரு உறுப்புகளையும் நடராஜனுக்கு தானமாக தந்தார். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக நடராஜனுக்கு மாற்று கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை பொறுத்தப்பட்டது.

பிறகு தான் நடராஜன் உயிர் பிழைத்தார். ஒரு மாதம் சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்த பிறகு கடந்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதி நடராஜன் வீடு திரும்பினார். பிறகு நடராஜன் ஒவ்வொரு மாதமும் மருத்துவமனைக்கு சென்று உடல்நிலையை பரிசோதித்து வந்தார்.

இந்நிலையில் நடராஜனுக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. மூச்சு திணறலாலும் அவதிப்பட்டார். ஏற்கனவே சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதன் பிறகு நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக  தெரிவித்துள்ளது. இதனால் டிடிவி தினகரன் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு மருத்துவமனையில் உள்ளார்.

இதனை அடுத்து தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கணவரை பார்க்க சசிகலா மீண்டும் பரோலில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இதற்காக பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் அவரது வழக்கறிஞர் பரோல் கேட்டு விண்ணப்பிக்க உள்ளதாக டிடிவி தினகரனின் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி இன்று பிறபகல் தெரிவித்துள்ளார்.

மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கணவரை பார்க்க பரோலில் வெளிவரவுள்ள சசிகலா