ads
தமிழகம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து - 6 மணிக்கு மேல் டாஸ்மாக் கடைகள் மூடல்
ராசு (Author) Published Date : Aug 07, 2018 17:51 ISTPolitics News
தற்போது திமுக தலைவர் கருணாநிதி இறந்துவிட்டதாக தகவல்கள் வெகுவாக பரவி வருகிறது. காவேரி மருத்துவமனையும் அவரது உடல்நிலை மோசமான சூழ்நிலைக்கு சென்று விட்டதாக சமாளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏராளமான இடங்களில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும் அடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் அவரது நிலை என்னவென்று தெரியாமல் தொண்டர்கள் கண்ணீருடன் கோஷமிட்டு வருகின்றனர். இதனை அடுத்து தமிழகம் முழுவதும் மாலை 6 மணிக்கு மேலாக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இது தவிர அனைத்து சினிமா காட்சிகளும் ரத்து செய்து திரையரங்குகளுக்கு மூடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மையான அமைதியாக கருணாநிதி நிலைமை குறித்து அறிக்கைக்காக காத்திருக்கின்றனர். தற்போது அமைச்சர் திருச்சி சிவா கண்ணீருடன் மருத்துவமனைக்குள் செல்கிறார். துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் வீடு திரும்புகின்றனர். மேலும் கருணாநிதி உடல் நலம் குறித்து அறிய மேற்கு வங்க முதலமைச்சரான மம்தா பேனர்ஜி இன்று சென்னை வருகிறார்.