ads

இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளிய ஐதராபாத் அணி

புள்ளிவிவரப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த சென்னை அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

புள்ளிவிவரப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த சென்னை அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஐபிஎல் 11வது சீசனின் 42வது ஆட்டம் இன்று டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையே நடக்க உள்ளது. தற்போது ஒவ்வொரு அணிகளும் தலா 10 போட்டிகளை எதிர்கொண்டுள்ளது. இதில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மட்டும் 11 போட்டிகளை எதிர்கொண்டுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கி சிறப்பாக விளையாடி கொண்டிருக்கிறது. இதுவரை 10 போட்டிகளை எதிர்கொண்ட சென்னை அணி 7 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது.

முன்னதாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த புள்ளிபட்டியலில் தற்போது முதலிடத்தில் ஐதராபாத் அணி 16 புள்ளிகளை பெற்று முதலிடத்திலும், 14 புள்ளிகளை பெற்று சென்னை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. தற்போது முதலிடத்தை பிடித்துள்ள ஐதராபாத் அணி தற்போதுவரை 10 போட்டிகளை எதிர்கொண்டு 8 போட்டிகளில் வெற்றியும், இரண்டு போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது.

மேலும் ஐதராபாத் மற்றும் சென்னை அணிகளுக்கிடையே ஒரே ஒரு போட்டி மட்டுமே நடந்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை தோற்கடித்துள்ளது. இன்று ஐதராபாத் அணியின் 11வது போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோல்வியை தழுவினால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படும். வெற்றியை கண்டால் தொடர்ந்து முதலிடத்தை பிடிக்க உள்ளது. இந்த புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் 6 புள்ளிகளை மட்டும் பெற்று டெல்லி டெர் டெவில்ஸ் அணி உள்ளது. 

இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளிய ஐதராபாத் அணி