ads
நேற்றைய ஆட்டத்தின் மூலம் பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லிக்கு இரண்டு இழப்பு
வேலுசாமி (Author) Published Date : Apr 26, 2018 18:00 ISTSports News
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சீசனின் 24வது T20 போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி அதிரடியாக விளையாடி சென்னை அணிக்கு 206 என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது. பெங்களூரு அணியில் டீ வில்லியர்ஸ் மற்றும் டீ கோக் ஆகியோர் 53 மற்றும் 68 ரன்களை எடுத்திருந்தனர். இதனை அடுத்து 207 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ஆனால் சென்னை அணியின் கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டத்தாலும், அம்பதி ராயுடுவின் அதிரடி திறமையினாலும் 207 என்ற இலக்கை எட்டி பெங்களூரு அணியை வீழ்த்தியது. சென்னை அணியின் வெற்றிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆனால் தற்போது 6 போட்டிகளில் விளையாடிய பெங்களூரு அணி தற்போது வரை இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.
இது தவிர நேற்று நடந்த போட்டியில் பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்கள், பந்து வீசுவதற்கு நீண்ட நேரம் எடுத்து கொண்டதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாருக்கு ஐபிஎல் நிர்வாகம் தற்போது பெங்களூரு அணியின் கேப்டன் கோஹ்லிக்கு, விதிமுறைகளை மீறி பந்து வீச தாமதமானதாக 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் நிர்வாகம், இந்த புகாரில் சிக்கும் முதல் வீரர் என்பதால் இந்த குறைந்த அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.