ads

தொடர் தோல்வியால் டெல்லியின் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து காம்பீர் விலகல்

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்சும், மும்பை அணியும் மோதியது. இந்த ஐபிஎல் சீசன் அடுத்த மாதம் 27வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்குபெற்று மோதி வருகின்றன. அதில் டெல்லி டெர் டெவில்ஸ் அணியும் ஒன்று. டெல்லி அணி தற்போது வரை 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால் இதில் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே வென்றுள்ளது.

இதர 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. டெல்லி அணி இறுதியாக கடந்த திங்கட் கிழமை பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. ஆனால் இந்த போட்டியிலும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டெல்லி அணிக்கு கேப்டனாக கவுதம் கம்பீர் உள்ளார். ஆனால் தற்போது தொடர் தோல்வியின் காரணமாக கவுதம் கம்பீர் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் நியமிக்க பட்டுள்ளார். நல்ல அனுபவமிக்க வீரரான கவுதம் காம்பீர் திடீரென மாற்றப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு வருத்தமளித்துள்ளது.

ஆனால் மீதமுள்ள போட்டியில் எப்படியாவது வென்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் அய்யரை நியமித்துள்ளனர். ஷ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமித்த பிறகு வரும் 27ஆம் தேதியில் மீண்டும் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ஷ்ரேயஸ் அய்யர் தனக்கு அளித்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர் தோல்வியால் டெல்லியின் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து காம்பீர் விலகல்