ads
ராணுவ உடையில் பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்ட மகேந்திர சிங் தோனி
வேலுசாமி (Author) Published Date : Apr 02, 2018 19:46 ISTSports News
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல் போன்ற அனைத்து துறைகளிலும் சாதனை படைத்த சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளில், 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படும் என கடந்த ஜனவரி 25-ஆம் தேதி அறிவிப்பு வெளியானது வெளியானது. இதன் பிறகு கடந்த 20ஆம் தேதி பத்ம விருதுகள் ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டது. இதன் இரண்டாம் கட்டமாக பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று குடியரசு தலைவர் மாளிகையில் தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அவர்கள் ராணுவ சீருடையில் பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்டார். இவரை தொடர்ந்து பிலியட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி, தமிழக நாட்டுப்புற கலைஞர் விஜய லக்ஷ்மி உள்ளிட்ட கலைஞர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்.
Proud moment #msdian's#PadmaBhushanmsd #mahendrasinghdhoni#msd @DHONIism @ChennaiIPL @CskIPLTeam @CSKFansOfficial pic.twitter.com/qoWUNZaDiE
— CSK Fan (@thala_dhoni7) April 2, 2018