ads
சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த தோனி
வேலுசாமி (Author) Published Date : Jan 19, 2018 15:40 ISTSports News
சென்னையில் இந்திய சிமெண்ட் நிறுவனத்தின் நிகழ்ச்சி நிகழ்ந்தது. இதில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தோனி கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் இந்திய அணியின் நிலைப்பாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு "இதனை இந்திய அணியின் நிலைக்கு பதில் சொல்வதாக கருத வேண்டாம். ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் அணி வெற்றி பெற இருபது விக்கெட்டுகளை வீழ்த்தவேண்டும். அது சாத்தியமில்லை என்று தெரிந்தால் அணி டிராவை நோக்கி நகரவேண்டும். டிராவை நோக்கி செல்லும் போது ரன்கள் குறைவாக விட்டுக்கொடுத்து அதிகமாக எடுக்க வேண்டும். இது வெளிநாட்டில் விளையாடினாலும், இந்தியாவில் விளையாடினாலும் இது தான் சிறந்த முறை." என்றார்.
மேலும் சென்னை அணிக்கு திரும்பியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் "சென்னை எனது இரண்டாவது தாய் வீடு. நான் சென்னை அணிக்கு மீண்டும் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை அணிக்கு மீண்டும் என்னை தேர்வு செய்ததை பெருமையாக நினைக்கிறேன். சென்னை எனக்கு தனி சிறப்பு வாய்ந்த இடம். ரசிகர்கள் அனைவரும் சென்னை எப்போது திரும்பும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சென்னையில் தான் அதிக ரன்களை குவித்தேன். அனைத்து வீரர்களுக்கும் சென்னை தனி சிறப்பு வாய்ந்தது.
கிரிக்கெட்டில் ஏற்ற இறக்கம் இருக்கும் அதை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும். சென்னை அணிக்கு கிரிக்கெட் வீரர் அஸ்வினை ஏலத்தில் எடுக்க உள்ளோம். இரண்டு வருடங்கள் சென்னை அணிக்கு விளையாடாமல் போனது வருத்தம் அளித்தாலும் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ளமுடிந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதுள்ள நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு பலமாக இருந்து வருகிறது." என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதனை தொடர்ந்து தோனி நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
dhoni speech about chennai super kings