ads
வெறும் 112 ரன்களில் சுருண்ட இந்தியா - விக்கெட் கீப்பராக தோனியின் சாதனை
வேலுசாமி (Author) Published Date : Dec 11, 2017 14:21 ISTSports News
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று தர்மசாலாவில் நடந்தது. இந்த போட்டியில் 112 ரன்களில் இந்தியா சுருண்டது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்தியாவின் 14வது குறைந்த பட்ச ஸ்கொர் இதுவாகும். சொந்த மண்ணில் இந்தியாவின் 3வது குறைந்த பட்ச ஸ்கொராகும். இதற்கு முன் 1986-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 78 ரன்களிலும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 1996-ஆம் ஆண்டு 100 ரன்களிலும் முடங்கியுள்ளது. இந்த போட்டியில் 13 ஓவர்கள் ரன்கள் ஏதும் இல்லாமல் மெய்டனாகியது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் 12 ஓவர்கள் மெய்டனாக்கியது அதிகபட்சமாக இருந்தது. மேலும் இந்த போட்டியில் 16 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது.
இதற்கு முன் ஜிம்பாப்வேக்கு எதிராக 1983-ஆம் ஆண்டு 17 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது தான் மோசமான நிகழ்வாக இருந்தது. மேலும் இந்த போட்டியில் விக்கெட் கீப்பர் தோனி அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளில் ஒரு விக்கெட் கீப்பராக 16 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இலங்கையின் சங்கக்காராவை(17,840) அடுத்து சர்வதேச போட்டியில் விக்கெட் கீப்பராக அதிக ரன்களை குவித்த வீரராக தோனி விளங்குகிறார். இந்த போட்டியில் ஒரு நாள் போட்டி கேப்டன்களில் 24-வது வீரராக ரோஹித் சர்மா விளங்குகிறார். மேலும் இந்தியாவின் 219வது ஒரு நாள் போட்டி வீரராக அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் விளங்குகிறார்.