ads
தவானை வம்பிழுத்த ரபடாவுக்கு ஊதியத்திலிருந்து 15 சதவீதம் அபராதம்
வேலுசாமி (Author) Published Date : Feb 14, 2018 23:20 ISTSports News
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத் என்ற இடத்தில நேற்று நடந்துள்ளது. இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் சேர்த்தது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் நிகிடி 4 விக்கெட்டை வீழ்த்தினார். இதனை அடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கி ஆடியது.
இதில் தென்ஆப்ரிக்கா அணி சார்பில் அதிகபட்சமாக ஹாசிம் அம்லா 71 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். மற்ற வீரர்கள் சொற்ப ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்க அணி 201 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனை அடுத்து இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த ஒருநாள் போட்டியில் சர்வதேச விதிகளை மீறி நடந்து கொண்டதாக தென் ஆப்ரிக்க வீரர் ரபாடாவுக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தற்போது ஐசிசி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று நடந்த போட்டியில் ரபாடா வீசிய பந்தில் தவான் ஆட்டமிழந்தார்.
அப்போது, அதனை கொண்டாடும் வகையில் தவானை வம்பிழுக்கும் விதமாக ரபாடா நடந்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இது விதிமுறைகளுக்கு மீறிய செயலாகும். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடாவுக்கு நேற்றைய போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளது.