ads

ரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்

நேற்றைய ஆட்டத்தின் மூலம் ஐதராபாத் அணி இரண்டு புதிய சாதனைகளை படைத்துள்ளது.

நேற்றைய ஆட்டத்தின் மூலம் ஐதராபாத் அணி இரண்டு புதிய சாதனைகளை படைத்துள்ளது.

நேற்று ஐபிஎல் 11வது சீசனின் 42வது ஆட்டம் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே நடந்து முடிந்துள்ளது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ப்ரித்வி ஷா மற்றும் ஜேசன் ரோய் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும், ரிஷாப் பண்டும் ஜோடி சேர்ந்தனர். இதில் ஷ்ரேயஸ் ஐயர் 3 ரன்களில் 8வது ஓவரில் ரன் அவுட் ஆனார். பின்னர் ஹர்ஷல் படேல் களமிறங்கி ரிஷாப் பண்டுடன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கொரை உயர்த்தினர். 14ஓவரில் 99ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்ஷல் படேல் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு மெக்ஸ்வெல்லுடன் ஜோடி சேர்ந்து ரிஷாப் பண்ட் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி 18ஓவரில் சதம் அடித்தார். ஆட்டத்தின் இறுதிவரை அவுட் ஆகாமல் ரிஷாப் பண்ட் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5விக்கெட் இழப்பிற்கு 187ரன்கள் எடுத்திருந்தது. இதில் ரிஷாப் பண்ட் மட்டும் அவுட் ஆகாமல் 128 ரன்களை எடுத்திருந்தார்.

இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கொர் இதுவே ஆகும். ரிஷாப் பண்ட் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்த ஐபிஎல்லின் அதிக பட்ச ஸ்கொர் என்ற சாதனையும், இந்த ஐபிஎல்லின் அதிக பட்ச ரன்கள் எடுத்த வீரர் என்ற பட்டியலில் 521 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதனை அடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அலெக்ஸ் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இதில் அலெக்ஸ் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இவருக்கு பிறகு அணியின் கேப்டன் கெயின் வில்லியம்சன் களமிறங்கினார். இருவரும் ஆட்டத்தின் தொடக்கத்திலே அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். நாளா புறமும் சிக்சரும் பவுண்டரியுமாக குவிய டெல்லி அணியின் வீரர்களை திணறடித்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி அடைய செய்தனர். இதில் ஷிகர் தவான் 50 பந்துகளில் 4 சிக்சரும் 9 பவுண்டரியும் விளாசி 92 ரன்களை எடுத்துள்ளார்.

பிறகு அணியின் கேப்டன் கெயின் வில்லியம்சன் 53 பந்துகளில் 2 சிக்சரும், 8 பவுண்டரியும் விளாசி 83 ரன்களை எடுத்துள்ளார். இருவரின் சிறப்பான அதிரடி ஆட்டத்தினால் ஐதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெல்லி அணியை வெளியேற்றியது. இந்த வெற்றியின் மூலம் 18 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்த வெற்றியினால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியாக ஐதராபாத் அணி உள்ளது.  இந்த போட்டியின் மூலம் தவான் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் இணைந்து மொத்தமாக 176 ரன்களை குவித்துள்ளனர். முன்னதாக தவான் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இணைந்து 139 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்ச ரன்களாக இருந்தது. ஆனால் தற்போது கெயின் வில்லியம்சன் மற்றும் தவான் ஆகியோர் இணைந்து 176 ரன்கள் குவித்து அதனை முறியடித்துள்ளனர். 

ரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்