ads

அறிவியல் துறையில் ஆஸ்கர் விருது பெற்ற இந்திய பொறியாளர்

indian engineer awarded sci tech oscar award 2018

indian engineer awarded sci tech oscar award 2018

ஒவ்வொரு ஆண்டும் சினிமா மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் சிறந்த கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் என்ற இடத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் இந்தியாவை சேர்ந்த விகாஸ் சதையே என்பவருக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இவர் இந்தியாவில் புனே நகரத்தை சேர்ந்தவர். இந்த விருது  'Shotover K1 Camera System'  என்ற கேமிராவை உருவாக்கியதற்காக அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கேமிராவின் வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் செயலாக்கம் போன்றவற்றிற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமிராவை விகாஸ் சதையே, ஜான் கோய்லே, ஷான் புக்கம், பிராட், அன்டெல், ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.  

இந்த கேமிரா ஹெலிகாப்டரில் முன்பகுதியில் பொருத்தப்படும் அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஹெலிகாப்டரில் புகைப்படம் எடுக்கும்போது, ஏற்படும் அதிர்வால் தெளிவாக படம் பிடிக்க முடியாது. ஆனால் இந்த கேமிரா ஹெலிகாப்டரில் ஏற்படும் அதிர்வுகளை கட்டுப்படுத்தி தெளிவான புகைப்படங்கள் மற்றும் விடியோவை எடுக்க வல்லது.

இந்த கேமிராவில் ஆறு வகை கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமிரா தனது நிலையில் இருந்து ஆறு வகையான திசைகளில் சுழலும் திறன் கொண்டது. 

vikas sathaye awarded scientific technical oscar award 2018, image credit - googlevikas sathaye awarded scientific technical oscar award 2018, image credit - google

அறிவியல் துறையில் ஆஸ்கர் விருது பெற்ற இந்திய பொறியாளர்