ads
லண்டன் மற்றும் அமெரிக்கா மக்கள் கூகுள் ஜிமெயிலில் பணம் பெற
ராசு (Author) Published Date : May 13, 2018 13:01 ISTTechnology News
டிஜிட்டல் உலகில் பல துறைகளில் ஜாம்பவானாக திகழும் கூகுள் ஏற்கனவே பண பரிவர்த்தனையில் பல முயற்சியில் வெற்றி கண்டறிந்தாலும் நவீன வளர்ச்சிக்கேற்ப பண பரிவர்தனையின் செயல்பாட்டை இன்னும் சுலபமாக்கும் முயற்சியில் இறங்கி சாதனை படைத்தது கொண்டிருப்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. அதில் அனைத்துமே இந்திய மக்களுக்கு வருவதில்லை, காரணம் புரிதலும் பாதுகாப்பு அம்சங்களுமே. என்ன தான் மக்கள் வாட்ஸாப்ப் போன்ற செயலிகள் மூலம் வியாபாரம் சார்ந்த தகவுள்களை பரிமாறிக் கொண்டாலும், அதிகாரபூர்வ அறிவிப்பிற்கு ஈமெயில் மூலமே தொடர்பு கொள்கிறார்கள்.
வணிகர்கள் மற்றும் சதாரண மக்கள் ஈமெயில் மூலம் புகைப்படங்கள், வியாபார ஆவணங்கள் மற்றும் சில கோப்புகளை அனுப்பிவந்தார்கள், கூகுள் ஜிமெயில் மூலம் பணத்தையும் பாதுகாப்பாக அனுப்பும் வசதி வந்துள்ளது. உதாரணத்திற்கு ஒரு வணிகர் அல்லது சாதாரண மக்கள் தங்களுக்கு தேவையான சேவையை பெற வணிக நிறுவனங்களுக்கு ஒப்புதலை கூகுளின் ஜிமெயில் மூலம் அனுப்பும்போது, அதனுடன் சேர்த்து முன்பணத்தையும் அனுப்பலாம். பெறுபவர் ஜிமெயில் மூலம் பணத்தை சுலபமாக தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
இந்த முறையை பயன்படுத்தி பல்வேறு வணிகத்திற்கு உபயோகப்படுத்தலாம். மேலும் ஒரு உதாரணமாக விடுதியில் தங்க கூகுளின் ஜிமெயில் மூலம் பணத்தை அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம். இதைப்போலவே, வணிகர்களும் தங்களுக்கு தேவையான பணத்தையும் கூகுளின் ஜிமெயில் மூலம் கோரிக்கை வைத்து வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொள்ள முடியும். இந்த பணம் டிஜிட்டல் முறையில் வருவதால், கூகுளின் ஜிமெயில் மூலம் பணம் பெற வாடிக்கையாளர்கள் கூகிள் பெ (Google Pay ) கணக்கு வைத்திருக்க வேண்டும்.
இந்த வசதி கணினியில் (PC) இருந்து அனுப்புவதற்கு முழு விவரத்தையும் தெரிந்துகொள்ள இந்த இணையதள பக்கத்தை கிளிக் செய்யவும் Click Here. ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் பண அனுப்ப மற்றும் பெற முழு விவரத்தையும் தெரிந்துகொள்ள இந்த இணையதள பக்கத்தை கிளிக் செய்யவும் Click Here. ஆப்பிள் போனில் இருந்து பணம் அனுப்ப மற்றும் பெறுவதற்கு முழு விவரத்தையும் தெரிந்துகொள்ள இந்த இணையதள பக்கத்தை கிளிக் செய்யவும் Click Here.
இந்த சேவை அமெரிக்கா மற்றும் லண்டன் மக்களுக்காக அறிமுகப்படுத்தி ஓராண்டுக்கு மேலானாலும் இதன் வெற்றியை பொறுத்தே, டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதுகாப்பாக திகழும் மற்ற நாட்டிலும் செயல்பட துவங்கும் என எதிர்பார்க்க பட்டது. ஆனால் டிஜிட்டல் முறையில் அதிக வளர்ச்சியில் வந்து கொண்டுஇருக்கும் இந்தியாவில் இல்லாதது பெரிய ஏமாற்றம்.