ads

அமெரிக்காவில் ஆப்பிள் வாட்ச்சால் உயிர் பிழைத்த 18 வயது இளம்பெண்

அமெரிக்காவில் ஆப்பிள் வாட்சால் உயிர் பிழைத்த 18 வயது இளம்பெண்

அமெரிக்காவில் ஆப்பிள் வாட்சால் உயிர் பிழைத்த 18 வயது இளம்பெண்

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் டீயான்னா  என்ற 18 வயது இளம்பெண்ணுக்கு நிமிடத்துக்கு 190 வரை இதயத்துடிப்பு  உள்ளது என்று ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் தெரிவித்தது. இவருடைய தாயார் செவிலியராக இருப்பதனால், இதை எளிதில் எடுத்துக் கொள்ளவில்லை. இதை உறுதிப்படுத்துக்கொள்ள  தன் மகளை பரிசோதனை செய்தபோது, இதயத்துடிப்பு அதிகமாக இருப்பதைக்கண்டு  அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக தன் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். டீயான்னாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு ரத்தக் கொதிப்பும் அதிகமாக உள்ளதாகத் தெரிவித்தனர். இரத்தப் பரிசோதனை செய்த பின்பு அவருக்கு சிறுநீரகம்  80 சதவீதம் செயலிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். மேலும், உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தினர். 

இதனைத் தொடர்ந்து, டீயான்னா தாயார் தன் நன்றியைத்  தெரிவிக்கும் விதமாக ஒரு கடிதம் ஒன்றை ஆப்பிள் நிறுவனத்துக்கு எழுதி இருக்கிறார். அதில் கூறப்பட்டதாவது, ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் என் மகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசாகக் கிடைக்கவில்லையென்றால், என் மகளைக் காப்பாற்றி இருக்க முடியாது. மேலும், சிறுநீரக செயலிழப்பு குறித்த அறிகுறிகளை இதற்கு முன்பு என் மகளுக்குத் தென்பட்டதில்லை. விரைவில் குணமடைந்து கல்லூரிக்குச் செல்லக் காத்திருக்கிறாள் என்று கூறினார். 

இந்தக் கதையைப் பகிர்ந்ததற்கு நன்றி தெரிவும் விதமாக ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக், தன ட்விட்டர் பக்கத்தில், உங்களின் இந்தப் பாராட்டுக்கள் எங்களை மேலும் உத்வேகப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் ஆப்பிள் வாட்ச்சால் உயிர் பிழைத்த 18 வயது இளம்பெண்