ads

இரண்டாவது முகமாற்று அறுவை சிகிச்சையின் மூலம் உலகின் மூன்று முக மனிதர் என்ற பட்டத்தை பெற்ற நபர்

உலகின் மூன்று முகம் கொண்ட நபர் என்ற பட்டத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜெரோம் ஹமோன் என்பவர் பெற்றுள்ளார்.

உலகின் மூன்று முகம் கொண்ட நபர் என்ற பட்டத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜெரோம் ஹமோன் என்பவர் பெற்றுள்ளார்.

மருத்துவ துறையில் மனிதர்களின் உடலுறுப்பு அறிவை சிகிச்சை, புதுப்புது சாதனையை படைத்தது வருகிறது. இந்த வகையில் தற்போது ஜெரோம் ஹமோன் 'Jerome Hamon' என்பவருக்கு பாரிஸை சேர்ந்த மருத்துவர்கள் இரண்டாவது முறையாக முகமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர். உலகில் இரண்டு முறை முகமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டது இவருக்கு தான். இது தவிர உலகில் தற்போது வரை 5 முறை மட்டுமே முகமாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜெரோம் ஹமோன், இவருக்கு வயது 43. இவர் கடந்த 2010-ஆம் ஆண்டில் தன்னுடைய முக சிதைவு காரணமாக முகமாற்று அறுவை சிகிச்சைக்காக பாரிசில் உள்ள 'Georges Pompidou hospital' மருத்துவமனையை அணுகினார். பின்னர் இவருக்கு 'Dr. Laurent Lantieri'என்பவரின் தலைமையில் முகமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த சிகிச்சையின் மூலம் ஜெரோம் ஹமோனுக்கு இரண்டாவது முகம் கிடைத்தது. இந்த சிகிச்சைக்கு முகத்தை தானம் செய்தவரின் வயது 63.

35 வயதான ஜெரோம் ஹமோன் உடல்  63 வயதானவரின் செல்களை ஏற்றுக்கொள்ளுமா என்ற அச்சம் மருத்துவர்களிடம் இருந்தது. ஆனால் சிகிச்சை முடிந்தவுடன் ஹமோனின் செல்கள் அதனை ஏற்று கொண்டது. ஆனால், இந்த சிகிச்சையினால் இவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பித்தது. இதனால் கடந்த 2015-இல் சளி, இருமலால் அவதிப்பட்டார். இதற்கு மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை தந்தனர்.

பிறகு 2016இல், இவருடைய செல்கள் சிறிது சிறிதாக அழிய தொடங்கியது. அதற்கான அறிகுறிகளும் முகங்களில் பரவ ஆரம்பித்தது. பின்னர் கடந்த ஆண்டில் இவருக்கு, முகம் முழுவதும் கட்டிகள் பரவி, காது இல்லாமல், கண்கள் இல்லாமல், சாப்பிட முடியாமல், பேச முடியாமல் முகமே வீங்கி போனது. ஆனால் அதிர்ஷ்டாவசமாக இவருக்கு இரண்டாவது முகமாற்று அறுவை சிகிச்சைக்கான முக தானம் கிடைத்தது. இதனை அடுத்து கடந்த ஜனவரி 15-ஆம் தேதி மதிய வேளையில் இவருக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த முறை இவருக்கு நோய் எதிர்ப்பு செல்களை நீக்கி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்பு இவருடைய செல்கள் இரண்டாவது புதிய முகத்தை ஏற்று கொண்டது. தற்போது நலமுடன் உள்ளார். இந்த சிகிச்சையின் மூலம் இவருக்கு மூன்றாவது முகம் கிடைத்துள்ளது. இதனால் அவரை மூன்று முக மனிதர் என்று அழைத்து வருகின்றனர். இரண்டாவது மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றியடைய, அவருக்கு தானம் செய்த நபரின் வயது 22.  

தற்போது ஜெரோம் ஹமோன் இந்த சிகிச்சையின் மூலம் இரண்டாவது அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒரே நபர் என்ற பெருமையும் கிடைத்துள்ளது. இந்த சிகிச்சையின் மூலம் மருத்துவர்களும் பெருமை அடைந்துள்ளனர். இது குறித்து 'மூன்று முக மனிதர்' ஜெரோம் ஹமோன் கூறுகையில் "முக சிதைவால் மிகவும் கஷ்டப்பட்டு வந்தேன். தற்போது எனக்கு மூன்றாவதாக புதிய முகம் கிடைத்துள்ளது. எனக்கு வயது 43, ஆனால் எனக்கு முகதானம் செய்தவருக்கு 22. இதனால் 20 வயது இளைஞராக காணப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முகமாற்று அறுவை சிகிச்சையின் மூலம் உலகின் மூன்று முக மனிதர் என்ற பட்டத்தை பெற்ற நபர்