ads

மைக்ரோசாப்ட் பயனாளர்களுக்கு நற்செய்தி - புதிய மைல்கல்லை எட்டிய மைக்ரோசாப்ட் வோர்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வோர்ட் செயலி தற்போது 500 மில்லியன் பயனாளர்களை கடந்துள்ளது. மேலும் தனது பயனாளர்களுக்கு மைக்ரோசாப்ட் புதிய அம்சத்துடன் கூடிய அப்டேட்டை வழங்கவுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வோர்ட் செயலி தற்போது 500 மில்லியன் பயனாளர்களை கடந்துள்ளது. மேலும் தனது பயனாளர்களுக்கு மைக்ரோசாப்ட் புதிய அம்சத்துடன் கூடிய அப்டேட்டை வழங்கவுள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமடைந்த மைக்ரோசாப்ட் ஆபிசில் வோர்ட், எக்ஸெல், பவர்பாயிண்ட் (Microsoft Office Suite Word, Excel, PowerPoint, and OneNote) போன்ற செயலிகள் இணையதளம் (Web), ஆண்டிராய்டு (Android), iOS போன்ற தளங்களில் கடந்த 27 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. கடந்த 1990இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலிகள் உலகம் முழுவதும் 102 மொழிகளில் பயனாளர்களுக்கு கிடைக்கிறது. இந்த செயலிகளில் முக்கிய செயலியான வோர்ட் (Word) ஆண்டிராய்டு தலத்தில் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

ஆண்டிராய்டு தலத்தில் பிளே ஸ்டோரில் வோர்ட் (Word) செயலியை டவுன்லோட் செய்த பயனாளர்களின் எண்ணிக்கை 500 மில்லியனை தாண்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கூகுள் பிளே ஸ்டார், அதிக டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகளை வரிசைப்படுத்தியுள்ளது. இதில் 500 மில்லியனை கடந்து மைக்ரோசாப்ட் வோர்ட் (Microsoft Word) செயலி சாதனை படைத்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் சொந்தமாக மொபைல் பிளாட்பார்மை கைப்பற்றிய பிறகு தனது செயலிகளை இணையதளத்தை (Web) தவிர ஆண்டிராய்டு மற்றும் iOS தளத்திலும் செயற்படுத்தி வருகிறது.

மேலும் மைக்ரோசாப்ட் வோர்ட் (Microsoft Word) செயலியின் விமர்சனங்கள் 2 மில்லியனை கடந்துள்ளது. பயனாளர்கள் இந்த செயலிக்கு 4.5 புள்ளியாக மதிப்பீடு செய்துள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனம் விரைவில் தனது பயனாளர்களுக்கு புது அம்சங்களுடன் கூடிய 'Continue on PC'அப்டேட்டை வழங்க உள்ளது. இந்த 'Continue on PC' அம்சம் மூலம் ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் 10 தலத்தில் கைவிடப்பட்ட வேலைகளை தொடர்ந்து ஆண்டிராய்டு தலத்திலும் தொடர வழிவகை செய்துள்ளது.

அதாவது மைக்ரோசாப்ட் செயலிகளான வோர்ட், எக்ஸெல் போன்ற செயலிகளில் தொடர முடியாமல் கைவிடப்பட்ட வேலைகளை மீண்டும் ஆண்டிராய்டு தலத்தில் உள்ள வோர்ட், எக்ஸெல் செயலிகளில் தொடரலாம். Continue on PC அப்டேட்டானது, முதலில் விண்டோஸ் 10 இயங்கு தலத்தில் இருந்து ஆண்டிராய்டு தளத்திற்கு இணைப்பை ஏற்படுத்தும். இதன் பிறகு ஆண்டிராய்டு தளத்திலும், மற்ற இயங்கு தளத்திலும் மாறி மாறி வேலைகளை தொடர்ந்து செய்யலாம். இந்த அம்சமானது தற்போது குறைந்த பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மைக்ரோசாப்ட் செயலிகளை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த அப்டேட் வழங்கப்படும். 

மைக்ரோசாப்ட் பயனாளர்களுக்கு நற்செய்தி - புதிய மைல்கல்லை எட்டிய மைக்ரோசாப்ட் வோர்ட்