ads

கூகுள் மேப்ஸில் நேவிகேஷன் ஐகானுக்கு பதிலாக வழங்கப்பட்டுள்ள 3D கார்

கூகுள் மேப்ஸில் வழக்கமாக உபயோகப்படுத்தி வரும் நீல நிற நேவிகேஷன் ஐகானுக்கு பதிலாக 3D வடிவிலான கார்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் மேப்ஸில் வழக்கமாக உபயோகப்படுத்தி வரும் நீல நிற நேவிகேஷன் ஐகானுக்கு பதிலாக 3D வடிவிலான கார்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் கூகுள் IO நிகழ்ச்சியில் கூகுள் செயலிகள் குறித்த அப்டேட்கள் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. அதன்படி கூகுள் செயலிகளில் ஒன்றன் பின் ஒன்றாக பல சிறப்பு அம்சங்களை அப்டேட்கள் மூலம் வழங்கி வருகின்றன. முன்னதாக ஜிமெயில் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் போன்ற செயலிகளில் சிறப்பு அம்சங்களுடன் கூடிய அப்டேட்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கூகுள் மேப்ஸ் செயலியிலும் பல அம்சங்களை இணைக்க உள்ளனர்.

அதன் முதற்கட்டமாக தற்போது கூகுள் மேப்ஸில் பயன்படுத்தப்படும் நேவிகேஷன் ஐகான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இயங்கி வந்த நீல நிற அம்புக்குறிக்கு பதிலாக அழகிய 3D வடிவிலான கார்கள் (Red Sedan, Green pick-up truck and Yellow SUV) வழங்கப்பட்டுள்ளது. இதன் GIF இமேஜ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தெரிவது போல் பயணத்தின் போது கூகுள் மேப்பில் காண்பிக்கப்படும் நேவிகேஷன் அம்புக்குறி மீது ஸ்வைப் செய்தால் ஐகானை தவிர இதர மூன்று வகையான 3D கார்கள் காண்பிக்கப்படும்.

அதில் விருப்பமானவற்றை தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு 3D கார் உதவியுடன் செல்லலாம். குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து அதனை அடைய எளிமையாக அடையும் வகையில் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் தற்போது iOS பயனாளர்களுக்கு மட்டும் வழங்கியுள்ளது. விரைவில் ஆண்டிராய்டு பயனாளர்களுக்கு வழங்கவுள்ளனர். 

கூகுள் மேப்ஸில் நேவிகேஷன் ஐகானுக்கு பதிலாக வழங்கப்பட்டுள்ள 3D கார்

கூகுள் மேப்ஸில் நேவிகேஷன் ஐகானுக்கு பதிலாக வழங்கப்பட்டுள்ள 3D கார்