ads

உங்கள் Android ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க

உங்கள் Android ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க

உங்கள் Android ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க

ஸ்மார்ட்போன் தற்போது அனைவரின் கைகளிலும் உள்ளது. ஆனால், அனைவரும் அதை சரியாக பராமரிக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், ஒருவர் எந்த ஆப்களுமே இல்லாமல் வைத்திருப்பர். மற்றொருவர் கண்ணில் கண்ட ஆப்களை எல்லாம் பதிவிறக்கம் செய்து வைத்திருப்பார். 

ஸ்மார்ட்போனை வேகமாக செயல்படவைக்கும்  சரியான அணுகுமுறைகளை இந்தப் பதிவில் காணலாம். இவற்றில் எதை செய்ய வேண்டும், எதை நீக்க வேண்டும்  என்று இரு வேறு பிரிவுகளாகக் கொடுத்துள்ளோம். இவற்றைப் பின்பற்றினால், தங்களின் ஸ்மார்ட்போனின் திறன் வெகுவாக அதிகரிப்பதை நீங்களே உணர முடியும். 

1) கிரோம் டேடா சேவர் மற்றும் மொபைலில் உள்ள டேடா சேவரை  விழிப்பில் வைத்திருக்க வேண்டும். இது தேவையற்ற நேரங்களில் டேடா விரயமாவதைத் தடுத்துவிடும். மேலும், போனின் செயல்திறனைக் கூட உதவும்.

2) ஸ்மார்ட்போனை லாக் செய்யப் பழகிக்கொள்ள வேண்டும். இதை செய்தால், உங்களின் தொடுதிரை எந்நேரமும் இயங்கிக்கொண்டிருப்பதை நீங்கள் தவிர்க்க இயலும். மொபைல்போன் லாக் ஆவதற்கான குறைந்தபட்ச நேரத்தை செட் செய்துகொள்ள வேண்டும்.

3) புதிய OS வெர்சனை உடனுக்குடன் அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இதற்கான அலெர்ட் மெசேஜ், நீங்கள் டேடாவை உபயோகிக்கும்போதே உங்களுக்கு தெரிய வரும்.

4) மொபைல்போனில் செட்டிங்சில் உள்ள பாக்டரி ரீசெட் என்பதை ஒரு முறை செயல்படுத்துவதன் மூலம், மெமோரியல் உள்ள ஜங்குகள் அனைத்தையும் நீக்குவத்துடுன், உங்களின் செட்டிங்சையும் மாற்றிவிடும். ஆதலால், இதைச் செய்யும்போது, உள்ளிருக்கும் டேடா மற்றும் செட்டிங்க்ஸ்கான அம்சங்களை குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும்.

5) உங்களின் மொபைல் வெர்சனுக்கான custom rom ஐ இன்ஸ்டால் செய்யவும். இதன் மூலம், ஸ்மார்ட்போனின் செயத்திறன் கூடும்.

பின்வருவனவற்றை நீங்கள் நீக்க வேண்டும்.

1) தேவையில்லாத மற்றும் உபயோகமற்ற ஆப்களை நீக்கிவிட்டு ஸ்மார்ட்போன் முன்திரையில்  (ஹோம் சிகிரீன்) வேண்டியனவற்றை மட்டும் பதிந்து வைக்கவும்.

2) கிலீயர் காகி (clear cache) -  காகிகளை நீக்குவதன் மூலம் மெமோரியில் நிறைய இடம் உருவாகிறது. இது போனின் வேகத்தை அதிகரிக்கச் செய்யும்.

3) அத்துடன் ரேம்களில் உள்ள பைல்களை மெமொரி கார்டுக்கு மாற்றிக்கொள்ளவும். தேவையில்லை எனில் முழுமையாக நீக்கிக் கொள்ளவும்.

4) பின்திரையில் ஆஃப்கள் இயங்குவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், இவைகள் ப்ரோசெசாரை எந்நேரமும் இயங்கிக்கொண்டே இருக்கும்.

5) அனிமேஷன் அம்சங்களை நீக்கிக் கொள்ள வேண்டும். 

உங்கள் Android ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க