ads

இந்தியாவில் பயன்படுத்தும் சீனாவின் 42 செயலிகள் மூலம் சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்பு

சீனாவின் 42 மால்வேர் அடங்கிய செயலிகளை இந்தியாவில் பயன்படுத்துவதால் இந்தியாவின் மீது சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்பு.

சீனாவின் 42 மால்வேர் அடங்கிய செயலிகளை இந்தியாவில் பயன்படுத்துவதால் இந்தியாவின் மீது சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்பு.

இந்தியாவில் ஆண்டிராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) ஸ்மார்ட் போனில் உபயோகப்படுத்தப்படும் சீனாவின் மென்பொருளில் 'ஸ்பைவேர் (Spyware)' எனப்படும் உளவு  பார்க்கும் வைரஸ் இருப்பதாக இந்தியாவின் புலனாய்வு துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஸ்பைவேர் மூலம் ராணுவம் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அதிகாரிகள் உபயோகப்படுத்துவதால் சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நமது தேவைக்காக ப்லேஸ்டார் (PlayStore) மற்றும் ஐடியூன்ஸ் (iTunes) போன்ற தளங்களில் பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்தும் போது நமக்கு தெரியாமல் இருக்கும் மால்வேர்களால் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு சர்வர்களில் பதிவாகிவிடும்.

இதனால் நமது நாட்டின் மீது சைபர் எனப்படும் மென்பொருள் தாக்குதலை சீனா நடத்தும் அபாயம் உள்ளதாக புலனாய்வு துறை தெரிவித்துள்ளது. அதன் படி தற்போது மால்வேர் அடங்கிய 42 சீன செயலிகள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் உபயோகப்படுத்தும் ட்ருகாலர் (TrueCaller) செயலிலும் அடங்கியுள்ளது.

ஆனால் ஸ்விடன் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ட்ருகாலர் (TrueCaller) இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த செயலியில் எந்தவித மால்வேர் போன்ற வைரஸ்களும் இல்லை என செயலியை உருவாக்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு வெளியிட்ட 42 சீன மால்வேர் செயலிகள் 1. Weibo, 2. WeChat, 3. SHAREit, 4. Truecaller, 5. UC News, 6. UC Browser, 7. BeautyPlus, 8. NewsDog, 9. VivaVideo- QU Video Inc, 10. Parallel Space, 11. APUS Browser, 12. Perfect Corp, 13. Virus Cleaner (Hi Security Lab), 14. CM Browser, 15. Mi Community, 16. DU recorder, 17. Vault-Hide, 18. YouCam Makeup, 19. Mi Store, 20. CacheClear DU apps studio, 21. DU Battery Saver, 22. DU Cleaner, 23. DU Privacy, 24. 360 Security, 25.  DU Browser, 26. Clean Master - Cheetah Mobile, 27. Baidu Translate, 28. Baidu Map, 29. Wonder Camera, 30. ES File Explorer 31. Photo Wonder, 32. QQ International, 33. QQ Music, 34. QQ Mail, 35. QQ Player, 36. QQ NewsFeed, 37. WeSync, 38. QQ Security Centre, 39. SelfieCity, 40. Mail Master, 41. Mi Video call-Xiaomi, 42. QQ Launcher

இந்தியாவில் பயன்படுத்தும் சீனாவின் 42 செயலிகள் மூலம் சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்பு