ஆரம்பமானது அமேசான் ஐபோன் திருவிழா பட்ஜெட் விலையில் ஐபோன்கள் வாங்கலாம்

       பதிவு : Jun 08, 2018 12:39 IST    
ஆரம்பமானது அமேசான் ஐபோன் திருவிழா பட்ஜெட் விலையில் ஐபோன்கள் வாங்கலாம் ஆரம்பமானது அமேசான் ஐபோன் திருவிழா பட்ஜெட் விலையில் ஐபோன்கள் வாங்கலாம்

ஐபோன் விரும்பிகளின் கவனத்திற்கு !

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற அமேசான் ஐபோன் திருவிழாவில், ஏராளமான ஐபோன்களை குறைந்த விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கி அமோக வரவேற்பைப் பெற்றது. அதே போல, இந்த மாதமும் ஜூன் 6 முதல் ஜூன் 12 வரை அமேசான் திருவிழா ஆரம்பமாகி விட்டது. இந்த அறிவிப்பிற்காக ஐபோன் விரும்பிகள் நெடு நாள் காத்துக்கொண்டிருந்தனர். இதை முன்னிட்டு, அமேசான் இந்தியா இணையதளத்தில், ஐபோன் மாடல்களின் குறைந்த விலைக்கான விவரங்கள் பின்வருமாறு. 

ஐபோன் X  64 ஜிபி       - ரூ.  84,000  
ஐபோன் X  256 ஜிபி     - ரூ. 97,900

 

ஐபோன் 8 பிளஸ் 64 ஜிபி - ரூ. 72,000
ஐபோன் 8 பிளஸ் 256 ஜிபி - ரூ. 84,000

ஐபோன்  7 128 ஜிபி     - ரூ.  55,000
ஐபோன்  7 256 ஜிபி     - ரூ. 58,000

ஐபோன் SE             - ரூ.  18,000
ஐபோன் 6                - ரூ. 24,000
ஐபோன் 6S              - ரூ. 34,000
ஐபோன் 6S பிளஸ்- ரூ. 38,000 

 

மேலும், ரூ. 14,500 வரையிலான தள்ளுபடிகளும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிறப்பம்சமாக HDFC வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ. 5,000 தள்ளுபடி உள்ளது. வாடிக்கையாளர்கள், தங்களின் தேவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்றார் போல ஐபோன் மாடல்களை வாங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள  முக்கியமான அம்சங்கள் மிகவும் உபயோககாரமாக இருக்கும். குறிப்பாக, ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 7, ஐபோன் 6  அம்சங்களின் வேறுபாடுகளை அறியும் வண்ணம் வரையறுக்கப்பட்டுள்ளது. 

தொடுதிரையின் சிறப்பம்சங்கள் : 
ஐபோன் X - 5.8-இன்ச் , 1125 x 2436 பிக்சல் 
ஐபோன் 8 - 4.7-இன்ச், 750 x 1334 பிக்சல்
ஐபோன் 7 - 4.7-இன்ச், 750 x 1334 பிக்சல்
ஐபோன் 6 - 4.7-இன்ச், 750 x 1334 பிக்சல்

ரேம் மற்றும் உள்ளீட்டு சேமிப்புத் திறன் :
ஐபோன் X - 3 ஜிபி /64 ஜிபி 
ஐபோன் 8 - 2 ஜிபி /64 ஜிபி
ஐபோன் 7 - 2 ஜிபி /32 ஜிபி
ஐபோன் 6 - 1 ஜிபி /16 ஜிபி

 

பின்பக்க மற்றும் முன்பக்க கேமராக்கள் :  
ஐபோன் X - 12 எம்பி  + 12 எம்பி / 7 எம்பி 
ஐபோன் 8 - 12 எம்பி / 7 எம்பி
ஐபோன் 7 - 12 எம்பி / 7 எம்பி
ஐபோன் 6 - 8 எம்பி / 1.2 எம்பி

பேட்டரி திறன் :
ஐபோன் X -  2716 mAh 
ஐபோன் 8 - 1821 mAh
ஐபோன் 7 - 1960 mAh
ஐபோன் 6 - 1810 mAh 

மேலே ஒப்பிட்டுப்  பார்க்கப்பட்டுள்ள ஐபோன் மாடல்களில் ஐபோன் 6ல் மட்டுமே 3.5 மிமி ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 8 முதல் தற்போது வரை வெளியாகியுள்ள அனைத்து ஐபோன் மடல்களிலும்  வயர்லெஸ் சார்ஜிங் முறை பின்பற்றப்பட்டுள்ளது. மேலும், நீர் மற்றும் தூசு படுவதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் விதமாக ஐபி 67 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

 


ஆரம்பமானது அமேசான் ஐபோன் திருவிழா பட்ஜெட் விலையில் ஐபோன்கள் வாங்கலாம்


செய்தியாளர் பற்றி

தங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க

rasu editor and writer

ராசுசெய்தியாளர்