ads

LG G7 ThinQ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்

LG G7 ThinQ ஸ்மார்ட்போனின் மிரளவைக்கும் அம்சங்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் Imagecredit: Twitter @AkashUpdate

LG G7 ThinQ ஸ்மார்ட்போனின் மிரளவைக்கும் அம்சங்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் Imagecredit: Twitter @AkashUpdate

LG நிறுவனம்  LG G7 ThinQ என்ற புதிய ஸ்மார்ட்போனை சவுத் கொரியாவில் இந்த வாரம் அறிமுகம் செய்தது.  இதனைத் தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வெளியிடப்பட உள்ளது. இதற்கு முந்தைய மாடலான  LG G6 ஐ விட அம்சங்களிலும் உயர்ரக வடிவத்திலும்  மேம்படுத்தப்பட்டுள்ளது.

LG G6 ஐ விட அரை இன்ச் கூடுதலாக 6.1 இன்ச் QHD+ தொடுதிரையைக் கொண்டுள்ளது. இதற்குப் போட்டியாக 6.1 இன்ச் OLED தொடுதிரையுடன் கூடிய ஹுவாய்  P20 Pro மொபைலும் 6.2 இன்ச் AMOLED தொடுதிரையுடன் சாம்சங் காளக்ஸி S  ப்ளஸ் மொபைலும் ஏற்கனவே சந்தையில் விற்பனைக்கு உள்ளது. எனினும், இது ஆப்பிள் ஐபோன் X இன் 5.8 இன்ச் திரையை விட பெரியதாகவே உள்ளது.

 LG G7 ThinQ கில் இரண்டு 16 மெகா பிக்செல் பின்பக்க கேமராக்களும் 8  மெகா பிக்செல் முன்பக்க கேமராவும் LED பிலாஷும்  பொறுத்தப்பத்துள்ளது.  இதற்கு முந்தைய  LG G6 ஸ்மார்ட்போனில் இரண்டு 16 மெகா பிக்செல் பின்பக்க கேமராக்களும் 5 மெகா பிக்செல் முன்பக்க கேமராவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.  ஐபோன் X, சாம்சங் காளக்ஸி S  ப்ளஸ் உள்ளிட்ட மாடல்களில் கூட 12 மெகா பிக்செல் கேமராக்களே உள்ளன. எனினும், சமீபத்தில் வெளியான  ஹுவாய்  P20 Pro மொபைலில், இந்த மாடல்களையெல்லாம் மிஞ்சும் விதமாக மூன்று பின்பக்க கேமராக்கள் (40MP/20MP/8MP) மற்றும் 24 MP செலஃபீ கேமராவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் X iOS 11 இயங்குதளத்திலும் ஏனைய மேற்கண்ட மொபைல்கள் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்திலும் செயல்படுகின்றன.  4GB ரேம் மற்றும் 64 GB உள்ளடக்க சேமிப்புத்திறனுடன் LG G7 ThinQ வெளிவந்துள்ளது. ஆனால், ஐபோன் X இல் 3GB ரேம் மற்றும் 64 GB உள்ளடக்க சேமிப்புடன் அமைந்துள்ளது.     சென்ற வருடம் அறிமுகமான எந்த மாடல்களிலும் இல்லாத வகையில், செயற்கை நுண்ணறிவு திறனுடன் இந்த புதிய மாடல் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பிரத்யேகமாக கூகுள் அசிஸ்டன்ட் என்ற பொத்தான் மொபைலுக்கு பக்கவாட்டில் அமைந்துள்ளதாக ஏற்கனவே இந்நிறுவனம் விளம்பரம் செய்திருந்தது. இது ஏற்கனவே சாம்சங் ஸ்மார்ட்போன்களில் உள்ள பிக்ஸ்பை அசிஸ்டன்ட் போல செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், AI CAM, QLens and Bright Mode என்று மேம்படுத்தப்பட்ட கேமரா அம்சங்களும் இதில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இதன் விலை சுமார் 60000 ரூபாயாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

LG G7 ThinQ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்