ads
2022 ஆண்டு முதல் விண்வெளி சொகுசு விடுதி செயல்பாட்டிற்கு வரும்
ராசு (Author) Published Date : Apr 08, 2018 14:22 ISTTechnology News
விஞ்ஞான வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தில் காலடி வைக்கப்போகும் முதல் நான்கு பேர், பனிரெண்டு நாட்கள் விண்வெளியில் தங்கி பூமியின் அழகை ரசிக்க போகிறார்கள், 2021ஆம் ஆண்டு அவர்களின் பெயர் பட்டியல் வெளியாகும். விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே செல்லமுடிந்த ஒரு இடத்திற்கு இப்போது பொது மக்களும் செல்லும் வாய்ப்பை வரும் 2022ஆம் ஆண்டு ஓரியன் ஸ்பேன் (Orion Span) நிறுவனம் அரோரா விண்வெளி நிலையத்தில் (Aurora Station) தங்க வைக்க முடிவு செய்து அதன் அதிகார பூர்வ அறிவிப்பை தனது இணையத்தளத்தில் வெளியிட்டது.
இதை பற்றி அவர்கள் வெளியிட்ட விவரங்கள், உலகின் முதல் விண்வெளி சொகுசு தங்கும் விடுதி அரோரா விண்வெளி நிலையத்தில் நிறுவவுள்ளது. இந்த சொகுசு விடுதியில் ஆறு பேர் தாராளமாக தங்கும் அளவிற்கு வடிவமைக்க பட்டுள்ளதாகவும். ஆறு நபர்களில் இரண்டு நபர்கள் ஓரியன் ஸ்பேன் நிறுவனத்தின் பணியாளர்கள் என்றும், விடுதியில் தங்கும் மற்ற நான்கு பேருக்கு தேவையான உதவிகளை இவர்கள் மேற்கொள்வார்கள். இந்த பயணத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை போல் சென்று புது அனுபவத்தை, பனிரெண்டு நாட்கள் தங்கி மகிழலாம்.
பனிரெண்டு நாட்கள் விண்வெளி விடுதியில் தங்குவதற்கும், விண்வெளி பயணத்திற்குமான செலவு - ஒரு நபருக்கு அமெரிக்கா விலையின் படி $9.5 மில்லியன் என்றும், இதற்கு முன்தொகையாக $80,000 தொகையை விருப்பமுள்ள பயணிகள் இப்போதே செலுத்தலாம் என்றும், ஒருவேளை தங்களால் வர முடியவில்லை என்றால் $80,000 திருப்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 61 கோடி இருக்கும். ஓரியன் ஸ்பேன் நிறுவனத்தின் நிறுவனர் பிராங்க் பங்கர் (Frank Bunger) கூறுகையில், அரோரா விண்வெளி நிலையத்தின் நோக்கமே விண்வெளிக்கு செல்ல விரும்பும் மக்களின் ஆசையை குறைந்த விலையில் குறுகிய காலத்தில் அழைத்து சென்று, அவர்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை தருவது என்று கூறினார்.
இந்த விண்வெளி பயணத்தின் சில முக்கிய அம்சங்கள், பொதுவாக விண்வெளிக்கு செல்ல குறைந்தது 24 மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் ஆனால் குறிப்பிட்ட செலவினால் மூன்று மாதங்களில் முடிக்க உள்ளனர். விண்ணப்பித்தவர்கள் மூன்று மாத பயிற்சியில் ஈடுபட்டு OSAC (Orion Span Astronaut Certification) சான்றிதழையும் பெற வேண்டும். இவர்கள் விண்வெளியில் தேவையான உணவை உற்பத்திசெய்து கொள்ளலாம். இவர்கள் தங்களின் குடும்பத்தினருடன் எந்த நேரத்திலும் நேரலையில் வீடியோ மூலம் பேசுவதற்கு அதிவேக வயர்லெஸ் இன்டர்நெட் வசதிகள் உள்ளது. மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று சூரிய உதயம் - சூரிய அஸ்த்தமனம். இந்த சொகுசு தங்கும் விடுதி ஒவ்வொரு 90 நிமிடங்கள் பூமியின் சுற்றுப்பாதையை கடப்பதால், குறைந்தது 24 மணி நேரத்தில் 16 முறை சூரிய உதயத்தையும், 16 முறை சூரிய அஸ்தமனதையும் காணும் பாக்கியம் இவர்களுக்கு உண்டு.