ads

பேஸ்புக் கண்காணிப்பை தடுக்க மொசில்லாவின் புதிய செயலி

நாம் பேஸ்புக் தளத்தை உபயோகப்படுத்துவதால் நமக்கே தெரியாமல் ரகசிய தகவல்களை திருடி விடுகிறது. இதனை தடுக்க மொசில்லா புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

நாம் பேஸ்புக் தளத்தை உபயோகப்படுத்துவதால் நமக்கே தெரியாமல் ரகசிய தகவல்களை திருடி விடுகிறது. இதனை தடுக்க மொசில்லா புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

பிரபல தேடுதல் செயலியான மொசில்லா (Mozilla Firefox) கடந்த 2002இல் செப்டம்பரில் துவங்கப்பட்டு 15 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் மில்லியன் பயனாளர்களை கொண்டுள்ள மொசில்லா 60 மொழிகளில் எளிதாக கிடைக்கிறது. பயனாளர்களின் தேடுதல் அனுபவத்தை எளிமையாக்கும் விதமாக புது புது அம்சங்கள் கொண்ட அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தனது பயனாளர்களின் தகவல்களை பிரபல சமுக வலைத்தளமான பேஸ்புக் கண்காணிப்பதில் இருந்து தடுக்க மொசில்லா புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் மீது பயனாளர்கள் தகவல்களை திருடியதாக பல குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது மொசில்லா புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. உலகம் முழுவதும் 2 பில்லியன் மக்களுக்கு மேல் பேஸ்புக் செயலியை ஆண்ராய்டு, விண்டோஸ், ஆப்பிள் போன்ற இயங்கு தலத்தில் உபயோகப்படுத்தி வருகின்றனர்.விண்டோஸில் பேஸ்புக் கணக்கை லாகின் செய்து உபயோகப்படுத்தும் போது, அந்த தேடுதல் செயலியில் (Browser) பயனாளர்களின் தகவல்களை ரகசியமாக தேர்ட் பார்ட்டி குக்கீஸ் (Third-Party Cookies) மூலம் கண்காணித்து வருகிறது.

இதன் மூலம் நீங்கள் வங்கிகளில் பணம் செலுத்தும் போதோ அல்லது தனிநபர் தகவல்களை உபயோகிப்படுத்தும் போதோ உங்களின் அனுமதி இல்லாமல் அந்த தகவலை திருடி விடுகிறது. தற்போது இதனை தடுக்க மொசில்லா தேடுதல் பொறியானது பேஸ்புக் கண்டெய்னர் (Facebook Container) எனப்படும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதனை பெற உங்கள் பிரவுசரில் வலது ஓரத்தில் உள்ள Open Menu பட்டனை க்ளிக் செய்து Add-Ons என்பதை க்ளிக் செய்யவும். பிறகு Scroll செய்து See More Add-Ons என்பதை க்ளிக் செய்து 'Facebook Container' என்று தேடவும்.

பின்னர் உங்களுக்கு Facebook Container செயலி காண்பிக்கப்படும். இதனை பெற Add Extension பட்டனை க்ளிக் செய்து Install செய்து கொள்ளவும். இந்த செயலி மூலம் நீங்கள் பேஸ்புக் தளத்தை உபயோகப்படுத்தும் போது அது நீல நிற வண்ணத்தில் காண்பிக்கும். இதன் மூலம் நீங்கள் பேஸ்புக் தளத்தை பாதுகாப்புடன் உங்கள் தகவல்களை கண்காணிக்காத படி பாதுகாக்கும். இந்த செயலியானது பேஸ்புக் மட்டுமல்லாமல் இதர வலைத்தளமான இன்ஸ்டாக்ராமும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை கண்காணிக்காதபடி பாதுகாக்க படுகிறது.

mozilla introduce new facebook container to stop facebook trackingmozilla introduce new facebook container to stop facebook tracking

பேஸ்புக் கண்காணிப்பை தடுக்க மொசில்லாவின் புதிய செயலி