ads

சூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான சூரியனை தொட்டு ஆய்வு செய்யக்கூடிய முதல் வேகமான செயற்கை கோளை இன்று விண்ணிற்கு செலுத்தியுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான சூரியனை தொட்டு ஆய்வு செய்யக்கூடிய முதல் வேகமான செயற்கை கோளை இன்று விண்ணிற்கு செலுத்தியுள்ளது.

பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு மூலாதாரமாக விளங்கும் சூரியனை, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறது. தற்போது சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு செய்ய ‘பார்க்கர் சோலார் புரோப்’ (Parker Solar Probe)' என்ற செயற்கை கோளை இன்று அனுப்பியுள்ளது. இந்த செயற்கை கோளானது 149 மில்லியன் கிமீ தூரம் பயணம் செய்து சூரியனை அடைய உள்ளது. மணிக்கு சுமார் 7,25,000 கி.மீ வேகத்தில் பயணித்து சுமார் 6 வருடங்கள் 11 மாதங்கள் சூரியனை 24 முறை சுற்றி வந்து ஆய்வு செய்யவுள்ளது.

ஏற்கனவே கடந்த 1970இல் சூரியனுக்கு சென்ற முதல் விண்கலமான 'ஹீலியஸ் 2' சூரியனில் இருந்து 27 மில்லியன் தூரத்தில் இருந்து தான் சூரியனை ஆய்வு செய்தது. ஆனாலும் சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சூரிய புயல் குறித்த தகவல்களை திரட்ட முடியவில்லை. ஆனால் நாசா இன்று அனுப்பியுள்ள ‘பார்க்கர் சோலார் புரோப்’ (Parker Solar Probe)' செயற்கை கோளானது சூரியனை தொடும் அளவிற்கு சென்று ஆய்வு செய்ய உள்ளது. இந்த செயற்கை கொள் செயல்படும் திறன் குறித்த வீடியோ ஒன்றினை நாசா வெளியிட்டுள்ளது.

இதன்படி இந்த செயற்கை கோளின் முன்பக்கத்தில் உள்ள 11.4 செமீ தடிமன் கொண்ட கார்பன் காம்போசிட்டால் ஆன கவசம் சூரியனில் இருந்து வெளிவரும் வெப்பத்தை தாங்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை சரியாக 3:53 மணிக்கு 25,000Mph வேகத்தில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. புதன், வெள்ளி கிரகத்தை கடந்து மணிக்கு 7,25,000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த செயற்கை கோளானது வாசிங்க்டன் லிருந்து டோக்கியாவிற்கு 1 நிமிடத்தில்  பயணிக்கும் மிக வேகமான செயற்கை கோளாகும்.

சூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்