ads
பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவும் நவீன தொழில்நுட்பம்
மோகன்ராஜ் (Author) Published Date : Jun 16, 2018 16:13 ISTTechnology News
நம் உலகம் தொழில்நுட்ப துறையில் பல சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் மொபைல், கணினி, ரோபோடிக்ஸ் மற்றும் மென்பொருள்கள் போன்ற பல துறைகளில் வளர்ந்து வருகிறது. மக்களுக்கு பெரிதும் உதவியானதாக இருக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) வைத்து காவல் துறை அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கும் வகையில் புதிய மென்பொருள்களை உருவாக்கியுள்ளனர். இதனை கொண்டு 50 வருடங்களுக்கு முன்னாள் காணாமல் போன மக்களை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
தற்போது பல நாடுகளில் இந்த தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளது. இதனை கொண்டு காணாமல் போன லட்சக்கணக்கான மக்களை எளிதாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காணாமல் போன உறவினர்களின் புகைப்படங்கள் இருந்தால் போதும். இந்த புகைபடத்தை வைத்து காணாமல் போவதற்கு முன்பு எப்படி இருந்தார், தற்போது எப்படி இருப்பார் என கணித்து விடுகிறது. இதற்காக இந்த மென்பொருளில் இரண்டு வழிமுறைகள் (Algorithm) சேர்க்கப்பட்டுள்ளது.
முதல் வழிமுறையில் 'generative adversarial network (GAN)' உபயோகப்படுத்தப்பட்டு, காணாமல் போன நபரின் முகம் தற்போது குறிப்பிட்ட வருடத்தில் எப்படி இருக்கும் என்பதை வயது அடிப்படையில் கணித்து சில தகவல்களை அளிக்கும். ஆனால் இரண்டாவது வழிமுறையானது வயதை மட்டும் வைத்து கணிப்பதில்லை, மாறாக அந்த கால இடைவெளியில் நெற்றி சுருக்கங்கள், தலைமுடி போன்றவற்றை தனது தரவு தலத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களுடன் ஒப்பிட்டு பார்த்து மிக சரியான தகவல்களை அளிக்கும். இதனை கொண்டு மிகவும் எளிதாக காணாமல் போன, நபர்களை காவல் அதிகாரிகள் எளிதாக கண்டுபிடித்து வருகின்றனர். குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் நடைமுறையில் உள்ள இத்தகைய தொழில்நுட்பம் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.